வரலாற்றுக்காலம்
பிற்காலப் பாண்டியர் காலம்
கூடுதல் விவரங்கள்
இது ஒர் எண்கோண வடிவக் கற்கிணறாகும். இக்கிணறு கல்தொட்டியுடன் கட்டப்பட்டுள்ளது. கருங்கல்லால் செய்யப்பட்ட இந்தக் கிணறு பத்தடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட கிணறாக இருக்கலாம். இவ்விடம் மதுரையிலிருந்து, உத்தப்பநாயக்கனூர் மற்றும் புலிமான்கோம்பை வழியாகச் சேரநாடு செல்லும் வழியில் அமைந்துள்ளது. எனவே, இக்கிணற்றின் பக்கத்தில் வண்டி மாடுகள் தாகம் தணிக்க இரு கல்தொட்டிகளூம் உள்ளன. இது போன்ற பல கிணறுகள் பாண்டியர் மற்றும் நாயக்கர் காலத்தில் இவ்வழியை ஒட்டி உருவாக்கப்பட்டன. இந்தக் கிணற்று நீரை தற்போது மக்கள் பயன்படுத்துவதில்லை, இருப்பினும் இறைவழிபாட்டிற்கு இக்கிணற்று நீரை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.
ஊர்
மேலப்பெருமாள்பட்டி
மாவட்டம்
மதுரை