அமைவிடம்
செட்டிக்குறிச்சி
வரலாற்றுக்காலம்
நாயக்கர் காலம்
கூடுதல் விவரங்கள்
செட்டிக்குறிச்சி கிராமத்தில் சாரங்கராஜா என்ற ஒரு ராஜா இருந்துள்ளார் என்றும், இவர் விஜயநகர நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியின் தலைவராக இருந்து மக்களுக்கான பல்வேறு தொண்டுகளையும் பல்வேறு அறச்செயல்களையும் செய்து வந்துள்ளார். இவர் வாழ்ந்த அரண்மனை இப்போது பாழடைந்து காணப்படுகிறது.
இந்த அரண்மனை தட்டையான செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அரண்மனையின் சுவர்கள் தடிமனாக உள்ளன. இந்த அரண்மனையின், ஜன்னல்களுடன் கூடிய, அறைகள் தற்போது இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த அரண்மனையின் முன்பகுதி பொது ஆண்டு 1955ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 1955ஆம் ஆண்டில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, அப்போதைய கல்வி, நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார் என்ற செய்தி ஒரு கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
ஊர்
செட்டிக்குறிச்சி
மாவட்டம்
விருதுநகர்