வரலாற்றுக்காலம்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
இங்குள்ள கண்மாயில் இரு மடைத் தூண்கள் காணப்படுகின்றன. பாண்டியர் காலத்தில் குளத்தில் பெருகும் தண்ணீரை வீணாக்காமல் தேக்கிப் பாசன வசதிக்காகக் கண்மாயில் சேர்த்துவைப்பர். நீரின் அளவைத் தெரிந்துகொள்ளவும், மக்கள் தண்ணீரைச் சண்டை சச்சரவின்றிப் பகிர்ந்துகொண்டு பயன்படுத்துவதற்காகவும் கண்மாயில் பத்தடி உயரம் உள்ள மடைக்கற்களை அமைத்தார்கள். இம்மடைத்தூண் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அருகில் உள்ள முதலைக்குளம் என்ற இடத்திலும், இம்மடையை ஒத்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் ஒரு மடைக்கல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்
விக்கிரமங்கலம்
மாவட்டம்
மதுரை