Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கரடிப்பட்டி பெருமாள்மலை சமணக் குகை

Karadipatti Perumalmalai Jain Cave

அமைவிடம்

கீழக்குயில்குடி சமணமலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.


வரலாற்றுக்காலம்

தமிழிக் கல்வெட்டு மற்றும் சமணப் படுக்கை - பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாண்டு; சமணச் சிற்பம்- பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டு


கூடுதல் விவரங்கள்

கரடிபட்டி என்ற இவ்வூர், ’முத்துப்பட்டி’ என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இங்குள்ள மலை 'பெருமாள் மலை', 'கரடி மலை' மற்றும் 'ஆலங்குளம்' என்றும் அழைக்கப்படுகிறது. இது சமணப் பாரம்பரிய மிக்க மலைப்பகுதியாகும். இவ்விடத்தில் 2 தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் முகப்புப் பகுதியிலும், அவற்றின் கீழ் இரண்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், மகாவீரரின் புடைப்புச் சிற்பம் குகையினுள் தனிப் பாறையிலும் உள்ளன. பல கற்ப்படுக்கைகளும், பாறை ஓவியங்களும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் மற்றும் அருகில் இரண்டு கற்காலக் குகைகளும் உள்ளன. குகைகளுக்குள் மழைநீர் நுழைவதைத் தடுக்கக் குகையின் புருவத்தில் ஒரு சீரான ஆப்பு செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கற்ப்படுக்கைகளும் மற்றும் ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டும் பொது ஆண்டிற்கு முன் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முகப்பில் ஆதிநாதர் (முக்குடைநாதர்) மற்றும் மற்றொறு தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. குகையினுள் உள்ள மகாவீரரின் அழகிய சிலையின் இடதுமேற்புறத்தில் சேதமடைந்துள்ளது. பெருமாள் மலைக்குச் செல்லும் வழியில், இரண்டு குளங்கள் உள்ளன - ஒன்று தெளிவான நீர் மற்றும் மற்றொன்று கிட்டத்தட்ட வறண்டுள்ளது. உச்சியில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கோயில் உள்ளது. அங்கு உள்ளூர்வாசிகள் ஆண்டுதோறும் பூசை செய்கிறார்கள்.


ஊர்

கரடிப்பட்டி

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்
மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 108-109 §தமிழ் பிராமி கல்வெட்டுகள், பக்கம் 62-64.
புகைப்படங்கள்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்

முனைவர் பா.ஆத்மநாதன், முனைவர் கண்ணன்