Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பேச்சியம்மன் கோயில் மடம்

Pechiyamman Temple Matta

வரலாற்றுக்காலம்

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்.


கூடுதல் விவரங்கள்

இவ்விடத்தில் பழமையான கோயில் மடம் ஒன்று உள்ளது. தற்போது இடிந்த நிலையில் காணப்படும் இந்த மடத்தின் வாயில் நிலையில் ஒரு தமிழ் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு,' உ ஆங்கிரஸ் வருடம் வைகாசி மாதம் இரண்டாம் தேதி சித்தயன் கோட்டை (சுராரண) வீர பத்திர சாமியால் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தது 25.5.32' என்ற செய்தியை தருகிறது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோயில் மடம், பொது ஆண்டு 1932 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது மீண்டும் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவெ, தற்போது வழிபாடுகள் ஏதும் நடைபெறவில்லை. இம்மடத்தில் இருந்த சிற்பங்கள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.


அமைவிடம்

கெங்குவார்பட்டியில் உள்ள ஞானம்மன் என்றழைக்கப்படும் திருகாளகஸ்தீஸ்வரர் கோயில் அருகே உள்ளது.


ஊர்

கெங்குவார்பட்டி

மாவட்டம்

தேனி

தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

மு. அகிலன்

மு. அகிலன்