Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம்

Veeramangai Velunachiyar Memorial Hall

வரலாற்றுக்காலம்

18 ஜூலை 2014


கூடுதல் விவரங்கள்

தமிழர் வீரத்தையும், அவர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைபெறுவதற்காக மேற்கொண்ட தன்னலமற்ற போராட்டத்தையும் பிரதிபலிக்கும் முக்கியப் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் ஆவார். பொது ஆண்டு 1730ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாரின் மகளாகப் பிறந்த வேலுநாச்சியார், தனது இளம் வயதிலிருந்தே கூர்ந்த அறிவையும், நுணுக்கமான போர்க்கலைத் திறன்களையும் பெற்றவராக விளங்கினார். பொது ஆண்டு 1772ஆம் ஆண்டில் எதிர்பாராத தாக்குதலில் தனது கணவர், மன்னர் முத்துவடுகநாதரை இழந்த வேளையில், கலக்கமின்றி உறுதியான நெஞ்சுடன் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போர் செய்தார். அவருக்கு உதவியாக மருது சகோதரர்கள் இருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஐதர்அலி மற்றும் விருப்பாட்சி கோபால் நாயக்கர் ஆகியோரின் ஆதரவையும் பெற்றார்.

தான் மட்டுமல்லாமல், தனது படைப்பிரிவில் பெண்களுக்கென்று தனிப்படையை உருவாக்கியமை, அவரது முன்னோடியான மனப்பாங்கையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிவகங்கை ஆட்சியைத் தொடர்ந்து பாதுகாத்து வந்த வேலுநாச்சியார், ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துத் தனது வீரத்தை நினைவில் கொள்ளச் செய்கிறார். இத்தகைய முன்மாதிரியின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில், 2014 ஜூலை 18 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில், ’வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம்’ திறந்து வைக்கப்பட்டது. வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளான சனவரித் திங்கள் 3ஆம் நாள், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது. இது, இந்திய விடுதலை இயக்கத்தின் வரலாற்றில் வீரத்தை வெளிப்படுத்திய ஒரு சிறந்த பெண்மணியைப் போற்றும் முக்கிய நிகழ்வாகும்.


ஊர்

சூரக்குளம்

மாவட்டம்

சிவகங்கை

தகவல்

க.த. காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்