வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 1886, ஆங்கிலேயர் காலம்
கூடுதல் விவரங்கள்
பொது ஆண்டு 1886-இல் இம்மேம்பாலத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் (ஏவி மேம்பாலம்) பொது ஆண்டு 1889-இல், அன்றைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தை வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் நேரில் வந்து திறந்து வைப்பதாக சம்மதித்திருந்த போதிலும், மதுரையில் அக்காலக்கட்டத்தில் நிலவிய காலரா நோய் காரணமாக, அவரால் வர முடியாது போகவே, மதுரை மாவட்ட ஆட்சியர் இப்பாலத்தை திறந்து வைத்துள்ளார். மதுரை நகர சபை வழங்கிய பத்தாயிரம் ரூபாய், தேசிய நிதியிலிருந்து வழங்கப்பட்டிருந்த அறுபதாயிரம் ரூபாய், சென்னை மாகாண அரசு வழங்கிய தொகை போன்ற நிதிகளைக் கொண்டு அன்றைய பொதுப்பணித் துறையினர் இப்பாலத்தைக் கட்டி முடித்துள்ளனர்.
சுமார் 250 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலத்தில் 16 தூண்களும் வளைவான (ஆர்ச்) வடிவமைப்புகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பழமையான மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஊர்
கோரிப்பாளையம்
மாவட்டம்
மதுரை