வரலாற்றுக்காலம்
நினைவு மணிமண்டபம் 20.02.2013 அன்று அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கூடுதல் விவரங்கள்
நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில், நிர்வாக வசதிக்காக, ஆட்சி பகுதி 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று விருப்பாட்சி என்ற இந்த இடம். அதன் 19 வது பாளையக்காராகப் பொறுப்பேற்ற கோபால் நாயக்கரின் இயற்பெயர் திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர் ஆகும். இவர் பொது ஆண்டு 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, திண்டுக்கல் கூட்டமைப்பு மற்றும் தீபகற்பக் கூட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கி போரிட்டார். சிவகங்கையை மீட்க வேலு நாச்சியார்க்கு உதவினார்.
ஆங்கில அரசுக்கு அடிபணியாததால் செப்டம்பர் மாதம் 1801 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அவருடைய தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் வகையில் இந்த மணிமண்டபம், அவர் ஆட்சி செய்த விருப்பாட்சி பகுதியில், அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்
விருப்பாட்சி
மாவட்டம்
திண்டுக்கல்