அக்டோபர் மாதத்தில் ஒரு நாள், சந்தல் உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா என்னும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவின் போது கொடியேற்றம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
வரலாறு / கதை
இத்தர்காவில் வழிபடப்படும் இப்ராஹிம் என்பவரை ஒரு சமயம் ஆங்கிலேயர்கள் விரட்டி வரும் பொழுது, அவர் இறைவனிடம் உதவி கேட்டதாகவும் இறைவன் அங்கிருந்த மலையை இரண்டாகப் பிளந்து அதனுள் இப்ராஹிம் சென்ற பின் மலை மூடியதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பொழுது ஆங்கிலேயர்கள் இப்ராஹீமை கண்டுபிடிக்க இயலாமல் திரும்பி சென்றுவிடுகின்றனர். பின்னர் இப்ராஹிம் குதிரை வடிவில் தோன்றி பிச்சை என்பவர் வீட்டிற்கு சென்று அவரது சட்டையினை பிடித்து இழுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின் பிச்சையும், அக்குதிரை தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதாக எண்ணி, அக்குதிரையை பின் தொடர்ந்து சென்றார். அப்போது குதிரை வடிவில் இருந்த இப்ராஹிம் சென்று நின்ற இவ்விடத்தை புனிதமானதாக கருதி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர் என்றும் சொல்லப்படுகிறது.
அமைப்பு
இத்தர்காவில் ஹஜ்ரத் சையத் வருசை இப்ராஹீம் ஷாஹிப் ஒலியுள்ளா அவர்களின் சமாதி அமைந்துள்ளது. தர்காவின் நுழைவாயிலில் வளைவு வடிவ (ஆர்ச்) அலங்காரங்களும், மினார்களும் குவிமட அமைப்பும் காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இத்தர்காவில் வழிபடுவோரின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்கு பேய் ஓட்டுவது மற்றும் சூனியம் எடுப்பது போன்ற சடங்குகள் நடைபெறுகின்றன. உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் பிற துயரங்களினால் துன்பப்படுபவர்கள் இங்கு வந்து தங்குவதாக சொல்லப்படுகிறது. தெய்வம் இவர்களது கனவில் தோன்றி, எத்தனை நாட்கள் இவ்விடத்தில் தங்கி வழிபட வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. அதன்படியே அவர்களும் இவ்விடத்தில் தங்கி முழுமையாக குணமடைவதாகவும் சொல்லப்படுகிறது. குணமடைந்து சென்றவர்கள் பின்னர் தர்காவிற்கு திரும்ப வந்து சேவல் அருத்து பலி கொடுத்து, அரிசி மாவு ரொட்டி சமைத்து கொடுத்து வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.
Worship
Five daily prayers and recitation are conducted.
Festival Details
In the month of October, on one day, a festival called Chandal Oorus (Sandalwood Festival) is celebrated. Many people participate in it. During the festival, flag hoisting and flag lowering take place.
Inscription / Copper
No
History / Legend
The people of this area say that when the English once chased Ibrahim, he prayed to God for help, and God split the nearby hill into two. Ibrahim went inside the hill, and it closed again. The English could not find him and returned. Later, it is said that Ibrahim appeared in the form of a horse and went to the house of a man named Pichai, pulling his shirt. Thinking that the horse wanted to say something, Pichai followed it. When the horse-form of Ibrahim stopped at this place, the public considered it sacred and began to worship there.
Architecture
This dargah houses the tomb of Hazrat Syed Warusai Ibrahim Shaheb Oliullah. At the entrance of the dargah, there are arch-shaped decorations, minars, and a dome structure.
Additional Information
Devotees say that all prayers offered in this dargah are fulfilled. Rituals such as driving away evil spirits and removing black magic are performed here. People who suffer from physical problems and other hardships come here and stay. It is said that the saint appears in their dreams and tells them how many days they should stay and worship in this place. They stay accordingly and are said to recover completely. After recovering, they return to the dargah, offer a rooster sacrifice, prepare rice-flour roti, and worship.