Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நாட்டுப்புறப் பாடல்கள்

Folk Songs

வகை

வழிப்பாட்டுப் பாடல்கள் (கும்மி பாடல்கள்), பொழுதுபோக்குப் பாடல்கள், உழவுப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் மற்றும் தாலாட்டு பாடல்கள்

பாடல் முறை

கும்மி பாடல்கள்- தென்மாங்கு பாணியில் பாடப்படும். இப்பாடல்கள் அனைத்தும் வாய்மொழியாக பாடப்படுவனவாகும்.

பாடப்படும் சூழல்- காலம்

சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களிலும், முளைப்பாரி திருவிழாவிலும் கும்மி பாடல்கள் பாடப்படும். உழவுப் பாடல்கள் பொழுது போக்குக்காகவும் ஒத்தியக்கத்திற்கும் பாடப்படும்.

பாலினம்

பாடியவர்கள் :

1.மாரியம்மாள் (பெண்), 79 வயது,

2.பாப்பம்மாள் (பெண்), 88 வயது,

3.சி.பஞ்சவர்ணம் (பெண்), 65 வயது,

4. பிச்சையம்மா (பெண்), 65 வயது,

5.மணக்கியம்மாள் (பெண்), 62 வயது,

6.நே.முத்துராக்கு (பெண்), 60 வயது,

7. நாகம்மாள் (பெண்), 87 வயது

ஊர்

ஆலமரத்துப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

பாடலின் கால அளவு
1 முதல் 5 நிமிடங்கள்.
பாடல் விவரங்கள்
இப்பாடல்களை இசைக்கருவிகள் இல்லாமல் பாடுகின்றனர். கும்மி பாடல்களைக் கைதட்டிக்கொண்டே பாடுவர்.
கூடுதல் விவரங்கள்
கேட்பொலிக் கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வகைகளின் விவரங்கள் பின்வருமாறு (refer audio file) :

கும்மி என்பது தமிழ்நாட்டின் பழமையான நடனக் கலையாகும். பொதுவாக இசைக் கருவிகள் இல்லாமல், கைகளைத் தட்டும் ஒலியையே தாளமாகக் கொண்டு பலர் குழுவாக வட்டமிட்டு ஆடும் நடனமே கும்மி எனப்படும். குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட, மற்றவர்கள் பின்பாட்டு பாடி, ஒன்றுசேர நடனம் ஆடுவர். பாடல் மெட்டுக்கு ஏற்ப கைகளால் தாளமிட்டு, அசைவுகளோடு ஆடப்படும் கும்மியில் பெறும்பாலும் பெண்கள் பங்கேற்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆண்களும் இதில் பங்கு பெறுகின்றனர். கும்மியடித்தலுக்கென்றே தனியாக கும்மிப் பாட்டு செவிவழியாக பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு, மக்களால் பாடப்பட்டு வருகிறது. இன்றும் தீப கும்மி, கதிர் கும்மி மற்றும் முளைப்பாரி கும்மி போன்றவை திருவிழாக்களில் காணப்படுகின்றன.

உழவுப் பாடல் என்பது மக்கள் வயலில் வேலை செய்யும்போது வெயில் மற்றும் வேலைப் பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடப்படும் பாடலாகும். செய்யும் வேலையை விரைவுபடுத்துவதற்காகவும், ஒத்த இயக்கத்தில் ஒருசேர செயல்படுவதற்காகவும் இப்பாடல்கள் வேகமான மெட்டில் அமைக்கப்பட்டிருக்கும்.

தமிழர்களின் வாழ்வில் இசை என்றுமே ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றபாடல் வடிவங்கள் தமிழில் உள்ளன. அவ்வகையில், இழப்புத் துயரத்தை வெளிப்படுத்தும் இசை வடிவமாக ஒப்பாரி குறிப்பிடப்படுகிறது. "ஒப்பு + ஆரி" எனும் சேர்க்கையிலிருந்து வந்த இந்தப் பாடல் முறை, இறந்த மனிதர்களின் வீடுகளில் பெண்கள் பாடும் அழுகைப் பாடல் ஆகும். இறந்தவரின் சிறப்புகளை புகழ்ந்து, அவரை இழந்த துன்பத்தை உணர்ச்சியோடு வெளிப்படுத்துவதே ஒப்பாரியின் நோக்கமாகும். சில சமயங்களில் இறந்த கால்நடைகளின் நினைவாகவும் ஒப்பாரி பாடல் பாடப்படும்.

தாலாட்டுப் பாடல்கள் குழந்தைகளின் அழுகையை நிறுத்துவதற்காகவும் குழந்தைகளை உறங்க வைப்பதற்காகவும் இயற்றப்பட்ட, இனிமையான இசையைக் கொண்ட பாடல்களாகும்.

நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் கோவில் திருவிழாக்களில் பாடும் வழிபாட்டுப் பாடல்கள், இறந்தவர் வீடுகளில் பாடும் ஒப்பாரிப் பாடல்கள், வயலில் வேலை செய்யும்போது வேலையின் களைப்பு தெரியாமல் இருக்க பாடும் கதிர் அறுத்தல் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், பொழுதுபோக்குப் பாடல்கள் ஆகியவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இப்பாடல்கள் பெரும்பாலும் எழுதி வைத்துப் பாடப்படுவன அல்ல. வழிவழியாகத் தங்கள் முன்னோர்களிடம் இருந்து செவிவழியாக இப்பாடல்களை இவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பாடல்கள் இவ்வூர் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளன.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

வெ.நாகஜோதிகா, மணக்கியம்மாள், மாரியம்மாள், சி.பஞ்சவர்னம்

கேட்பொலி