Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நாட்டுப்புற பாடல்கள்

Folk songs

வகை

வழிபாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கும்மி பாடல்கள்.


பாடப்படும் இடம்

கோயில் திருவிழாக்கள், வயல்வெளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாடப்படும்.


பாலினம்

பெண்


பாடலின் கால அளவு

4-20 நிமிடங்கள்


ஊர்

தோடனேரி

மாவட்டம்

மதுரை

பாடல் விவரங்கள்
சில சமயங்களில் தப்பு கொட்டு போன்ற இசைக்கருவிகளின் துணையோடு இப்பாடல்கள் பாடப்படும்.
கூடுதல் விவரங்கள்
கேட்பொலிக் கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வகைகளின் விவரங்கள் பின்வருமாறு (refer audio file) :

நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் கோயில் திருவிழாக்களில் பாடும் வழிபாட்டுப் பாடல்கள், வயலில் வேலை செய்யும்போது வேலையின் களைப்பு தெரியாமல் இருக்க பாடும் கதிர் அறுத்தல் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், பொழுதுபோக்குப் பாடல்கள் ஆகியவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இப்பாடல்கள் பெரும்பாலும் எழுதி வைத்துப் பாடப்படுவன அல்ல. வழிவழியாகத் தங்கள் முன்னோர்களிடம் இருந்து செவிவழியாக இப்பாடல்களை இவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பாடல்கள் இவ்வூர் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக உள்ளன.

தமிழர்களின் வாழ்வில் இசை என்றுமே ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றபாடல் வடிவங்கள் தமிழில் உள்ளன. அவ்வகையில், கும்மி என்பது தமிழ்நாட்டின் பழமையான நடனக் கலையாகும். பொதுவாக இசைக் கருவிகள் இல்லாமல், கைகளைத் தட்டும் ஒலியையே தாளமாகக் கொண்டு பலர் குழுவாக வட்டமிட்டு ஆடும் நடனமே கும்மி எனப்படும். குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட, மற்றவர்கள் பின்பாட்டு பாடி, ஒன்றுசேர நடனம் ஆடுவர். பாடல் மெட்டுக்கு ஏற்ப கைகளால் தாளமிட்டு, அசைவுகளோடு ஆடப்படும் கும்மியில் பெறும்பாலும் பெண்கள் பங்கேற்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆண்களும் இதில் பங்கு பெறுகின்றனர். கும்மியடித்தலுக்கென்றே தனியாக கும்மிப் பாட்டு செவிவழியாக பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு, மக்களால் பாடப்பட்டு வருகிறது. இன்றும் தீப கும்மி, கதிர் கும்மி மற்றும் முளைப்பாரி கும்மி போன்றவை திருவிழாக்களில் காணப்படுகின்றன.

குலவை பாடல், கருப்பசாமி பாடல், அம்மன் பாடல், ஜல்லிக்கட்டு பற்றிய பாடல், கும்மி பாடல் மற்றும் பிற முளைப்பாரி பாடல்கள் போன்ற நாட்டுப்புற பாடல்களை இவ்வூரில் உள்ள சில பெண்மணிகள் பாடுகின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் பலவிதமான மெட்டுக்களை உருவாக்கி பாடுகின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

காணொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

கேட்பொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி