Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வழிபாட்டு பாடல்கள்

Devotional songs

வகை

கும்மி பாட்டு, வழிபாட்டு பாடல்கள்.


பாடப்படும் சூழல்- காலம்

கோயில் திருவிழாக்கள் மற்றும் முளைப்பாரி விழாவின் போது இப்பாடல்கள் பாடப்படுகின்றன.


பாலினம்

இந்த வாய்மொழி பாடலைப் பாடியவர் ஆயம்மாள் என்ற பெண் ஆவார்.


பாடலின் கால அளவு

வழிபாட்டின்போது சுமார் இரண்டு மணி நேரம் வரை கும்மி பாடல்கள் மற்றும் வழிபாட்டு பாடல்கள் பாடப்படுகின்றன.


ஊர்

மேலமாத்தூர்

மாவட்டம்

மதுரை

பாடல் விவரங்கள்
சில சமயங்களில் தப்பு, உறுமி போன்ற இசைக்கருவிகளின் துணையோடு இப்பாடல்கள் பாடப்படும்.
கூடுதல் விவரங்கள்
கேட்பொலிக் கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வகைகளின் விவரங்கள் பின்வருமாறு (refer audio file) :

தமிழர்களின் வாழ்வில் இசை என்றுமே ஒரு முக்கியப் பங்கு வகித்துள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றபாடல் வடிவங்கள் தமிழில் உள்ளன. திருவிழா காலங்களில் பல வகையான வழிபாட்டுப் பாடல்கள் பாடப்படும். குறிப்பாக முளைப்பாரி எடுக்கும்போதும் கும்மி பாடல்கள் பாடப்படும். கும்மி என்பது தமிழ் நாட்டின் பழமையான நடனக் கலையாகும். பொதுவாக இசைக் கருவிகள் இல்லாமல், கைகளைத் தட்டும் ஒலியையே தாளமாகக் கொண்டு பலர் குழுவாக வட்டமிட்டு ஆடும் நடனமே கும்மி எனப்படும். குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட, மற்றவர்கள் பின்பாட்டு பாடி, ஒன்றுசேர நடனம் ஆடுவர். பாடல் மெட்டுக்கு ஏற்ப கைகளால் தாளமிட்டு, அசைவுகளோடு ஆடப்படும் கும்மியில் பெறும்பாலும் பெண்கள் பங்கேற்பர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆண்களும் இதில் பங்கு பெறுகின்றனர். கும்மியடித்தலுக்கென்றே தனியாக கும்மிப் பாட்டு செவிவழியாக பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு, மக்களால் பாடப்பட்டு வருகிறது.

பல வகையான வழிபாட்டு பாடல்கள் மற்றும் கும்மி பாடல்களைத் தெரிந்து வைத்துள்ள இவ்வூர் பெண்கள் சிலர், இவ்வூரில் நடைபெறும் வழிப்பாட்டு நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களில் நடைபெறும் கோயில் நிகழ்ச்சிகளிலும், வீட்டு விசேஷங்களிலும் சென்று பாடுவதாக தெரிவிக்கின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

காணொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி