சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காளையார் கோவிலிலிருந்து சிலுக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள வேளாங்குளம் என்னும் சிற்றூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல்வட்டங்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 5 மீட்டர் முதல் 12 மீட்டர் விட்டம் வரை உள்ள கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் வெவ்வேறு வடிவமுள்ள பல கற்கள் வட்ட வடிவில் வைக்கப்பட்டுள்ளன.
முற்காலத்தில் இறந்தவர்களின் உடல் பகுதிகளையோ அல்லது சாம்பலையோ வைத்துப் புதைத்த இடத்தின் மேற்பரப்பில் காணப்படும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் கல்வட்டமும் ஒன்றாகும். இவை ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கவும் அடையாளப்படுத்தவும் உதவுகின்றன. இத்தகைய கல்வட்டங்கள் தமிழகத்தில் கற்கள் கிடைக்காத ஆற்றுப்படுகைகளைத் தவிரப் பிற பகுதிகளில் நூற்றுக்கான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
Additional Information
In the small village of Velankulam, located on the road from Kalaiyarkoil to Silukampatti in the Sivaganga district, remains of megalithic period such as stone circles and urn burials have been discovered. Stone circles ranging in diameter from 5 meters to 12 meters are found in this area. Many stones of different shapes are placed in a circular shape at this site.
Stone circles are one of the Megalithic structures found on the surface of sites where the body parts or ashes of the deceased were buried in ancient times. These help to preserve and identify the burial sites. Such stone circles are found in the hundreds in Tamil Nadu, except in riverbeds where stones are not naturally available.