Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பெருங்கற்கால நெடுங்கல்

Megalithic Menhir

அமைவிடத்தின் பெயர்

வருசநாடு அருகே உள்ள மயிலாடும்பாறை கிராமத்திற்கு அருகிலுள்ள வடக்குக் குட்டம் என்ற மலையில் உள்ளது.


பண்பாட்டுக் காலம்

பெருங்கற்காலம்


கூடுதல் விவரங்கள்

வடக்குக் குட்டம் என்ற மலையில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் ஒன்று காணப்படுகிறது. இந்நெடுங்கல்லின் உயரம் 6.5 அடி மற்றும் அகலம் 3.5 அடியாக உள்ளது. நெடுங்கல்லின் கீழ்பகுதி அகலமாகவும் மேல் பகுதி சற்று கூர்மையாகவும் உள்ளது. நெடுங்கற்கள் பொதுவாக பெருங்கற்காலப் புதைவிடங்களை குறிக்கும் ஈமச்சின்னங்களாகும். இந்நெடுங்கல்லை சுற்றிலும் அருகிலும் பல கற்கள் சிதறிக்கிடக்கின்றன. அவை அசமச்சீர்/ சீரற்ற வடிவம் கொண்டுள்ளன. எனவே, இவை சேதமடைந்த கற்குவியலாகவோ, நெடுங்கல் செய்யும்போது உருவான கற்கழிவுகளாகவோ அல்லது இவை முன்னோர்களின் ஈமச்சடங்கின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


ஊர்

மயிலாடும்பாறை

மாவட்டம்

தேனி

தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்