அமைவிடத்தின் பெயர்
போடிநாயக்கனூருக்கு மேற்குப் பக்கம் சொக்கநாதர் கோயில் அருகில் பிச்சாங்கரை
பண்பாட்டுக் காலம்
பெருங்கற்காலம்
கூடுதல் விவரங்கள்
இப்பகுதியில் கற்திட்டைகள், கற்திட்டையுடன் கூடிய கல்லறை மற்றும் கல்வட்டம் என ஒன்பது பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ளன. இங்குள்ள கல்வட்டம் விரிந்த நிலையில் உள்ளது. இவற்றில் மூன்று மட்டுமே தற்போது முழுமையாகக் காணப்படுகின்றன. மற்றவை இயற்கையாலும் பிற காரணங்களாளும் சிதைந்துள்ளன. இப்பகுதியில் காணப்படும் இக்கல்திட்டைகள் மூலம் பெருங்கற்காலத்திலிருந்தும் அதற்கு முன்பும் இப்பகுதி, மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.
ஊர்
கொட்டக்குடி
மாவட்டம்
தேனி