அமைவிடத்தின் பெயர்
கடமலைக்குண்டு குமணன்தொழு அருகே உள்ள கல்லாயுதபுரம்
பண்பாட்டுக் காலம்
பெருங்கற்காலம்
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த மூன்று வகையான ஈமச்சின்னங்கள் உள்ளன. கற்பதுக்கையுடன் கூடிய ஈமச்சின்னம், நெடுங்கல் வகை ஈமச்சின்னம் மற்றும் கல்வட்டங்கள் ஆகியவை இங்குக் காணப்படுகின்றன. இங்குள்ள கற்பதுக்கைகளில் சுமார் பதினைந்துக்கு மேற்பட்டவை சிதைந்த நிலையில் உள்ளன. இக்கற்பதுக்கைகளுக்கு அருகில் 4 அடி உயரமுடைய குத்துக் கற்களும் நடப்பட்டிருக்கின்றன. இங்குக் காணப்படும் நெடுங்கற்கள், கீழ் இருந்து மேல் வரை சதுரமான தட்டையான வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு நெடுங்கல்லின் சராசரி உயரமும் 6 அடி முதல் 8 அடி வரையிலும், அகலம் 4 அடி முதல் 6 அடி வரையிலும் உள்ளன. இவ்விடத்தில் முன்பு பல நெடுங்கற்கள் மற்றும் முழுமையான கல்வட்டங்கள் இருந்ததாகவும், அவை தற்போது சிதைந்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், இப்பெருங்கற்கால ஈமச்சின்னத்திற்கு அருகே முன்னொரு காலத்தில் கல்லாயுதபுரம் என்ற மக்கள் குடியிருப்புப் பகுதி ஒன்று இருந்ததாகவும் வெம்பூர் மக்கள் கூறுகின்றனர்.
ஊர்
வெம்பூர்
மாவட்டம்
தேனி