Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பெருங்கற்கால கற்திட்டை

Megalithic Dolmen

அமைவிடத்தின் பெயர்

கோரங்கொம்பு


பண்பாட்டுக் காலம்

பெருங்கற்காலம்


கிடைத்த தொல்பொருட்கள்

கல்திட்டைகள்


ஊர்

தாண்டிக்குடி

மாவட்டம்

திண்டுக்கல்

கூடுதல் விவரங்கள்
கோரங்கொம்பு என்ற இந்த இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பல கற்திட்டைகள் காணப்படுகின்றன. கற்திட்டைகள் என்பது 2300 -3000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஈமச் சின்னங்கள் ஆகும். இவை பெரும்பாலும் கல் பலகைகளால் உருவாக்கப்பட்ட அறை போன்று தோற்றத்தைக் கொண்டிருக்கும். இக்கட்டமைப்பின் கீழ் முன்னோர்களின் உடல்களோ அல்லது எச்சங்களோ புதைக்கப்பட்டிருக்கும். இவ்விடத்தில் காணப்படும் கல்திட்டைகளில் இப்போது இரண்டு மட்டுமே முழுமையான நிலையில் காணப்படுகின்றன. மற்றவை காலப்போக்கில் சேதம் அடைந்துள்ளன. இக்கல்திட்டைகள் ஏறக்குறைய மூன்று முதல் நான்கடி உயரம் இருக்கின்றன. இந்த மலைப்பகுதி இன்றும் பளியர் மக்களின் குடியிருப்பாக உள்ளது. இவ்விடத்திற்கு அருகில் உள்ள கொடைக்கானல் மற்றும் பழனி ஆகிய பகுதிகளிலும் கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

காணொலி

மூ.செல்வம்