Parai (traditional percussion instrument of the Tamils), Marakkal (short stilt used for dance performance )
Name of the artisan
T. Thanga Pandi
Product Usage
Beating the Parai Drum, dancing on stilts.
Village Name
Anaiyur
District
Madurai
காட்சிப்படுத்தப்படும் இடம்
ஆனையூர் முதன்மைச் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
மரக்கால் ஆட்டம் என்பது பாரம்பரிய நடன முறையாகும். இந்த மரக்கட்டைகள் பொதுவாக இரண்டு முதல் ஐந்து அடி உயரம் வரை கொண்டிருக்கும். பொதுவாக இந்த மரக்கட்டையின் அடிப்பகுதி குறுகலாகவும் மேல் பகுதி அகலமாகவும் அமைந்திருக்கும். மரக்கால் ஆட்டக்காரர்கள் இக்கட்டையைத் தங்கள் காலோடு பிணைத்துக் கட்டிக் கொண்டு நடனம் ஆடுவர். முற்காலத்தில் நச்சுப் பூச்சிகள் இருக்கும் காடு போன்ற பகுதிகளில் நடந்து செல்வதற்காக மக்கள் இதைப் பயன்படுத்தினர்.
மரக்கால் கட்டைகளைக் காலில் கட்டுவதற்கு முன்பு அவற்றைக் கோவிலில் வைத்துச் சூடமேற்றி வணங்கும் பழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. உலக நிம்மதியைக் கெடுப்பதற்காக அசுரர்கள் சிலர் பாம்பு, தேள் ஆகிய நச்சுயிரிகளைப் போல உருமாறிய பொழுது, கொற்றவை (துர்க்கை) மரத்தால் செய்த கால்களின் மேல் ஏறி நின்று கூத்தாடி அவர்களை அழித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும். இவ்வாறு ஆடிய கூத்திற்கு 'மரக்கால் கூத்து' என்று பெயர் வந்தது. இந்த மரக்கால்கள் நச்சுப் பூச்சிக் கடியிலிருந்து தப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட கருவிகளாகக் கருதப்படுகின்றன.
பறை மிகத் தொன்மையான தோற்கருவியாகும். பறையை உருவாக்குவதற்கு முதலில் வட்ட வடிவிலான மரச் சட்டத்தைச் செய்து கொள்கின்றனர். பின்னர் மாட்டுத் தோலை இழுத்துச் சட்டத்தைச் சுற்றி ஒரு பிரத்தியேகமான பசையைக் கொண்டு ஒட்டுகின்றனர். பிறகு இப்பறை வார்களைக் கொண்டு நன்கு இறுக்கிக் கட்டப்படுகிறது.
இந்தக் கைவினைக்கலைஞர் மரக்கால் மற்றும் பறை எனப்படும் இசைக்கருவிகளைச் செய்யும் இந்தப் பட்டறையின் குழுத் தலைவராக விளங்குகிறார். இவர் பல விளையாட்டுகளில் கைதேர்ந்தவராக உள்ளார். இவர் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் வெளிநாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார். இவர் தனது வீட்டிலேயே மரக்கால் மற்றும் பறை போன்றவற்றைச் செய்து வருகின்றார். கலைஞர்கள் இவரது இல்லத்திற்கே வந்து இப்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்தப் பொருட்கள் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
தொழில் முறை
குடிசைத் தொழில்
Location of Display
It is located near Anaiyur Main Road.
Additional Information
Marakkaal Aattam is a traditional dance form. The wooden stilts used in this dance generally range from two to five feet in height. Typically, the base of the stilt is narrower, while the upper part is broader. Dancers fasten these stilts to their legs and perform intricate dance movements.
In earlier times, people used these wooden stilts to walk through forests and regions infested with venomous creatures. Some individuals follow a custom of placing the stilts in a temple, lighting camphor, and offering worship to the deity before using them.
According to oral tradition, when certain Asuras (demons) transformed into venomous creatures like snakes and scorpions to disrupt world peace, Kotravai (Durga) stood on wooden stilts and danced to defeat them. This dance became known as "Marakkaal Koothu."
Parai is one of the oldest percussion instruments made of leather. To create a Parai drum, a circular wooden frame is first crafted. Then, stretched cowhide is attached to the frame using a special adhesive. Finally, the drum is tightly secured with leather straps.
Thanga Pandi is the leader of a workshop specializing in making Marakkal stilts and Parai drums. He is highly skilled in various traditional arts and has participated in numerous events, including international performances. He also crafts these instruments in his own home, where artists visit to purchase them. These instruments are exclusively used in cultural performances.