செல்லூர்' என்ற ஊர் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் பகுதியாகும். இவ்வூரில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுக்கூடங்கள் அதிகம் இருந்துள்ளன. கைத்தறித் துண்டுகள் உற்பத்திக்குப் பெயர் பெற்ற செல்லூரில், திரும்பிய பக்கமெல்லாம் கைத்தறிச் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க நூல்களில் நெசவைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். அதுமட்டுமின்றி இவ்விடத்திற்கு அருகிலுள்ள கீழடி அகழாய்விலும், பல நூற்றாண்டுகள் பழைமையான சுடுமண் தக்களிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொது ஆண்டு 1993, 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளங்களால் மக்களின் வாழ்வாதாரமாய் இருந்த கைத்தறித் தொழில் ஏறக்குறைய அழிந்தே விட்டது. இந்தப் பகுதி மக்கள் பிழைப்பிற்கு மாற்றுத் தொழில் வேண்டிச் சென்று விட்டனராம். இருப்பினும், சிலர், பாரம்பரியமிக்க இத்தொழிலைக் கைவிடாது இன்றளவும் நடத்தி வருகின்றனர்.
தொழில் முறை
குடிசைத் தொழில்
Additional Information
The town of Sellur is located on the northern bank of the Vaigai River. This area has historically been home to numerous handloom and power loom weaving units. Known for producing high-quality handloom fabrics, Sellur was once filled with the continuous sounds of looms in operation. References to weaving can be found in Sangam literature dating back around 2,000 years.
Furthermore, ancient terracotta spindle whorls have been unearthed at the nearby Keezhadi excavation site, providing archaeological evidence of the region's weaving heritage. However, floods in 1993 and 2005 severely impacted the local handloom industry, which had been a primary livelihood for many residents. As a result, many people turned to alternative occupations.
Yet, a handful of dedicated individuals continue to preserve and practice this traditional craft, refusing to let it fade into obscurity.