Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மட்பாண்டம் வனைதல்

Pottery Making

வகை

மட்பாண்டம் / சுடுமண் சிற்பம்


கைவினைப் பொருளின் பெயர்

மட்பாண்டம்


கைவினைக் கலைஞர் பெயர்

திரு. திருப்பதி, 52 வயது.

திருப்பதி என்னும் இந்த மண்பாண்டக் கலைஞர், கடந்த 40 ஆண்டுகளாக இதைத் தனது குலதொழிலாக செய்து வருகிறார். இவருடைய பிள்ளைகளும் இத்தொழிலிலேயே ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்.


அங்கீகாரம்

உள்ளது


ஊர்

தெற்குதெரு

மாவட்டம்

மதுரை

பயன்பாடுகள்
வீட்டு உபயோக பொருளாகப் பயன்படுகிறது.
காட்சிப்படுத்தப்படும் இடம்
மண்பாண்ட தொழிற்கூடம் தெற்குதெரு
கூடுதல் விவரங்கள்
மட்பாண்டங்கள் செய்வதற்கான மண்ணை நரசிங்கம்பட்டி கண்மாயிலிருந்து மாட்டு வண்டியில் கொண்டு வருகின்றனர். அந்த மண்ணை மட்பாண்டங்களாக வடிவமைப்பதற்கு ஏற்றாற்போல் கொத்தி, கிளறி, காயவைத்துப் பதப்படுத்துகின்றனர். பின்னர் அந்த மண்ணை முதலாவது தொட்டியிலிட்டு தண்ணீர் ஊற்றிய பின், இரண்டாவது தொட்டியிற்கு சல்லடை வழியாக மாற்றம் செய்கின்றனர். நான்கு நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தொட்டியிலிருக்கும் மண்ணை, பாடம் செய்யும் முறையில் சரிசெய்து பரப்பி வைக்கின்றர். பின்னர் இவ்வாறு பரப்பிய மண்ணை குவித்து வைக்கின்றனர். அதிக அளவில் இவ்வாறு குவித்து வைக்கப்படும் மண் இறுகிய தன்மையை அடைந்துவிடுகிறது. தேவைக்கேற்ப சிறிது சிறிதாக இக்களிமண்ணை எடுத்து பொருட்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர். இந்த மண்பாண்ட பொருட்கள் மூன்று நாட்கள் வரை வெயிலில் காயவைக்கப் பட்ட பின், சுடப்படுகின்றன.
தொழில் முறை
தொழிற்கூடம்
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

ராஜசோழன், ராஜேஷ்

ராஜசோழன், ராஜேஷ்

ராஜசோழன், ராஜேஷ்

ராஜசோழன், ராஜேஷ்

ராஜசோழன், ராஜேஷ்

ராஜசோழன், ராஜேஷ்

ராஜசோழன், ராஜேஷ்

கேட்பொலி

ராஜசோழன், ராஜேஷ்