Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கொச்சம் திரித்தல் (கயிறு திரித்தல்)

Rope Making

வகை

பிற


கைவினைப் பொருளின் பெயர்

கயிறு


கைவினைக் கலைஞர் பெயர்

ஜாஸ்மின் பர்வினா


பயன்பாடுகள்

வேளாண் தொழில் மற்றும் பந்தல் அலங்காரத்தில் இக்கயிறுகளின் பயன்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.


ஊர்

கோடங்கிநாயக்கன்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கூடுதல் விவரங்கள்
நிலக்கோட்டை பகுதியில், குறிப்பாக புதூர் மற்றும் கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமங்களில் கயிறு திரித்தல் தொழிலானது நடைபெற்று வருகிறது. இங்கு வடக் கயிறு, பாரக் கயிறு, வால் கயிறு, கமலைக் கயிறு, கடகா கயிறு, பிடிக் கயிறு, தாம்புக் கயிறு, தும்புக் கயிறு என பலவகையான கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு மணிக் கொச்சம், சாரம் கட்டும் கொச்சம் மற்றும் மூன்று பிரி வடம் என்ற அளவிலேயே கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கயிறு திரிப்பதற்கு தேவையான மூலப்பொருள் தென்னைநார் ஆகும். இந்த நார் தேனி, கம்பம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது. குறிப்பாக இம்மூன்று பகுதிகளிலிருந்து கிடைக்கும் நார், நீளமாகவும் தரமாகவும் இருப்பதால், இங்கிருந்து நார்கள் வாங்கப்படுகின்றன.

கயிறு திரித்தல் தொழிலில் இருபாலரும் ஈடுபட்டாலும், பெண்களே அதிக அளவில் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். நார் பிரித்தல், மட்டைகளை கருவியில் போடுதல், நீர் அடித்தல், நாரினை ஊறவைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர். மறுபுறம், மட்டைகளை வெளியிடங்களில் இருந்து வண்டியில் ஏற்றி வருவது, கயிறுகளை வெளியிடங்களுக்கும் கடைகளுக்கும் விற்பனை செய்வது போன்ற பணிகளை ஆண்கள் மேற்கொள்கின்றனர்.

முன்பு பாரம்பரிய முறையில் திரிக்கப்பட்ட கொச்சக் கயிறு/ கொச்சைக் கயிறு, இன்று புதூர் மற்றும் கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமங்களில் இயந்திரங்களின் மூலம் திரிக்கப்படுவதால், அதிக அளவில் பெண்களும் இத்தொழிலில் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. தற்போது நவீன இயந்திரங்களின் வருகையால் நைலான் கயிறும் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இயற்கையான தென்னை நாரிலிருந்து தயாரிக்கப்படும் கொச்சைக் கயிறுக்கே இன்றும் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நார், கேரளா, ஒடிசா போன்ற பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த மாநிலங்களில், அலங்கார பந்தல்களை அமைப்பதற்கும் திராட்சை கொடிகளை கட்டுவதற்கும் கொச்சக் கயிறுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவாதாக சொல்லப்படுகிறது.
தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

காணொலி

மு.சாந்தி