Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இரும்புப் பொருட்கள் தயாரிப்பு

Crafting of Iron Objecs

வகை

உலோக வேலைப்பாடு


கைவினைப் பொருளின் பெயர்

இரும்பு சார்ந்த பொருட்கள்


கைவினைக் கலைஞர் பெயர்

சிவன் (கைவினைக் கலைஞர்)


ஊர்

மைக்கேல் பாளையம்

மாவட்டம்

திண்டுக்கல்

பயன்பாடுகள்
வேளாண் தொழிலில் பயன்படுத்தப்படும் இரும்பு சார்ந்த கருவிகள் தயாரிக்கபப்டுகின்றன.
கூடுதல் விவரங்கள்
விவசாயத்தில் பயன்படும் மண்வெட்டி, ஏர் கலப்பை, கருக்கரிவாள், களைக்கொத்து, கடப்பாறை போன்ற கருவிகளை இரும்பு கொல்லர்கள் இங்கு உற்பத்தி செய்கின்றனர். இந்தக் கருவிகள் வேளாண் நிலத்தை உழ, விதைக்க, அறுவடை செய்ய, களை எடுக்க என பல்வேறு பணிகளுக்கு பயன்படுகின்றன.

தமிழ்நாட்டில் சுமார் 80 சதவீத கை கருவிகள் மற்றும் பாரம்பரிய கருவிகள் கிராம கைவினைஞர்களால் செய்யப்படுகின்றன. முற்காலத்தில் பெரும்பாலான வேளாண் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளூர் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன - குறிப்பாக கருவிகளுக்கான கைப்பிடிகள் வெவ்வேறு மரங்களைக் கொண்டு வருவாக்கப்பட்டன. இரும்புக் கருவிகள் செய்வது மிகக் கடினமான வேலை. இதற்கு உடல் உறுதி அதிகம் தேவை. வேளாண் இரும்புக் கருவிகளைத் தயாரிக்க, முதலில் இரும்புக் கட்டிகள் அல்லது பழைய இரும்பு கழிவுப் பொருட்களை உருக்கி, பின்னர் அதை ஒரு வார்ப்பில் ஊற்றி குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்குவார்கள். அதன்பின், உலோகத்தை சூடுபடுத்தி, தட்டி, தேவைப்படும் இறுதி வடிவத்திற்கு கொண்டு வருவார்கள்.

அண்மை காலத்தில், விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு வேலை தேடி சென்று விட்டதாலும், மிகப்பெரிய தொழிற்சாலைகள், அவர்கள் தயாரித்துவந்த மண்வெட்டி, கலப்பை போன்ற கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதாலும், இரும்பு கொல்லர்களுக்கு கிடைத்து வந்த வேலையின் அளவு மிகவும் குறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. டிராக்டர்களின் வருகையால், மாட்டுவண்டிகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கிவிட்டது. இதன் விளைவாக, காளைமாடுகளின் கால்களுக்கு லாட ஆணி தயாரிக்கும் தொழில் செய்து வந்த இரும்புக் கொல்லர்களுக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.

முற்காலத்தில் வேளாண் தொழிலில், விதை விதைப்பது, நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அறுப்பது என அனைத்தும் மனித சக்தி மூலம் நடைபெற்று வந்தது. கால்நடைகளுக்கும் இந்த தொழிலில் அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போது வயல் வேலைகள் அனைத்துமே இயந்திரமயமாகி விட்டன. அதேசமயம் விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த பழங்கால கருவிகள் மற்றும் இரும்புப் பொருட்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப அழிந்து வருவதாக இப்பகுதி இரும்பு கொல்லர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

காணொலி

மு.சாந்தி