Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மண் சிலைகள் தயாரிப்பு

Manufacture of Terracotta Statues

வகை

மட்பாண்டம்


கைவினைப் பொருளின் பெயர்

மண்ணாலான சிலைகள்


கைவினைக் கலைஞர் பெயர்

பொதும்பு கிராமத்தின் கோயில் நிர்வாகம் சார்பில், பூசாரி குடும்பத்தினர் மண்ணாலான நேர்த்திக்கடன் சம்பந்தமான பொருட்களைச் செய்கின்றனர்.


பயன்பாடுகள்

பொதும்பு கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் குதிரை சிலைகள், தீச்சட்டிகள், சாமி சிலைகள் மற்றும் பிற நேர்த்திக்கடன் பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.


ஊர்

பொதும்பு

மாவட்டம்

மதுரை

காட்சிப்படுத்தப்படும் இடம்

இவ்வூர் கோயிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், பூசாரி குடும்பத்தினர் சிலைகளை செய்து காட்சிப்படுத்தி வருகின்றனர்.

கூடுதல் விவரங்கள்

மண்ணாலான குதிரை சிலைகள், உருவ சிலைகள், தீச்சட்டி, தெய்வங்களின் சிலைகள் உள்ளிட்டவை பொதும்பு கிராமத்தில் இன்றளவும் கோயில் பூசாரி குடும்பத்தினரால் செய்யப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில், கோயிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இது போன்ற சிலைகள் செய்யப்படுகின்றன. மேலும் பல ஊர்களைச் சேர்ந்த மக்களும் இங்கு வந்து குதிரை எடுப்பு சிற்பங்களை வாங்கி செல்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

சில முக்கிய பொருட்களைப் பயன்படுத்தி இன்றளவும் பாரம்பரிய முறையில் இந்த சிலைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மண், அடி சண்டு மற்றும் யானை லத்தி /சாணம் சேர்க்கப்படுகிறது. பொதும்பு கிராம திருவிழா மதுரை முழுவதும் பரவலாக தெரிந்த திருவிழாவாகும். அதிலும் குதிரை எடுப்பு விழா என்பது மிக முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது. அதற்கு காலம் காலமாக சில வரலாற்றையும், தொன்மையான சில நடைமுறைகளையும், இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பிடிமண் கொடுப்பது என்பதுதான் திருவிழாவின் அச்சாரமாக நிகழ்ந்து வருகிறது. அதாவது, ஊர் மந்தை அல்லது சாவடி என்று அழைக்கப்படும் பொதுமக்கள் அனைவரும் கூடும் ஓரிடத்தில், ஊர் பெரியவர்கள் சார்பில் பிடிமண் எனப்படும் சிலை செய்வதற்கான கைப்பிடி மண், வற்றிலைப் பாக்கு மற்றும் காணிக்கையுடன் பூசாரி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அப்படி ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே அந்த வருடம் திருவிழா நடைபெறுகிறது என்பது உறுதியாகிறது என்று அர்த்தமாம். அப்படி பிடிமண் கொடுத்த பின்னரே குதிரைகள் சிலைகள், தீச்சட்டி, உருவச்சிலைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய துவங்குகிறார்கள். இன்றளவும் பொதும்பு கிராமத்தில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.

தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் துர்கா தேவி

புகைப்படங்கள்

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

காணொலி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

கேட்பொலி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ரேவதி, ஜென்சி