Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாலை தொடுத்தல்

Flower Garland making

வகை

மாலை கட்டுதல்


கைவினைப் பொருளின் பெயர்

மலர் மாலைகள்


கைவினைக் கலைஞர் பெயர்

பாக்கியலட்சுமி, யசோதா


பயன்பாடுகள்

வாழைநார்களை கொண்டு கல்யாணங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளுக்கு பயன்படும் பூ மாலைகள் தொடுக்கப்படுகின்றனர்.


ஊர்

சத்திரப்பட்டி

மாவட்டம்

மதுரை

காட்சிப்படுத்தப்படும் இடம்
இங்கு செய்யப்படும் மாலைகள் அனைத்தும் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த வியாபாரமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
மல்லிகைக்கு பெயர் பெற்ற மதுரை மாநகரம், பல நூறு ஆண்டுகளாக பூ மாலைகள் தயாரிப்பில் சிறப்புப்பெற்று விளங்குகிறது. மல்லிகை மட்டும் அல்லாமல், மணம் கமழும் பல மலர்கள் இங்கு அறுவடை செய்யப்படுகின்றன. அவை பல தருணங்களை அலங்கரிக்கும் மாலைகளாகவும் மதுரையின் பல பகுதிகளில் தயார் செய்யப்படுகிறன்றன. சத்திரப்பட்டியில் பல ஆண்டுகளாக, மாலை மற்றும் பூ தொடுத்தல் குடிசை தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

கிலோ கணக்கில் வாழைத்தார்கள் வாங்கப்பட்டு, அவற்றை காயவைத்து பக்குவப்படுத்தி, தனித்தனி நாராகப் பிரித்து, அவற்றை கொண்டே இங்கு மலர் மாலைகள் தொடுக்கப்படுகின்றன. வண்ண நூற்கண்டுகளால் செய்யப்பட்ட பூ போன்ற வடிவம் மற்றும் பிற வடிவங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப செய்யப்பட்டு, மாலையோடு இணைக்கப்படுகின்றன.
தொழில் முறை
குடிசைத் தொழில்
தகவல்

முனைவர் துர்கா தேவி

புகைப்படங்கள்

முனைவர். தெ.துர்கா தேவி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ஜென்சி

முனைவர். தெ.துர்கா தேவி, ஜென்சி

கேட்பொலி

முனைவர். தெ.துர்கா தேவி, ஜென்சி