Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கூடை முடைதல்

Basket Weaving

வகை

கூடை பின்னுதல்


கைவினைப் பொருளின் பெயர்

கூடைகள்


கைவினைக் கலைஞர் பெயர்

ராஜேந்திரன், கவிதா, முனியம்மாள், ரஞ்சித் ஆகியோரைக் கொண்ட குழு.


பயன்பாடுகள்

இக்கூடைகள் பொருட்களைச் சுமந்து செல்லவும், தானியங்களைச் சேமித்து வைக்கவும் பயன்படுகின்றன.


ஊர்

பேகம்பூர்

மாவட்டம்

திண்டுக்கல்

கூடுதல் விவரங்கள்
தமிழகத்தில், மண்பாண்டம் தொழிலைப் போலவே மிகவும் தொன்மையான தொழிலாகக் கூடைமுடைதல் தொழில் கருதப்படுகின்றது. நாடோடியாக வாழ்ந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழ கற்றுக் கொண்டான். அதன் விளைவாக தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை மலைப்பகுதியில் இருந்து சேகரித்துக் கொண்டுவர அங்கு கிடைக்கும் எளிய குச்சிகளைப் பயன்படுத்தி முதன்முதலில் கூடைகளை வனைந்தான். அவ்வாறு வனையப்பட்ட கூடையானது இன்று கூடை முடிதல் தொழிலாக பரிணாமம் பெற்றுள்ளது.

கூடை முடிதல் தொழிலில் பொதுவாக 10க்கும் மேற்பட்ட மூலப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அவை நொச்சிகுச்சி, மூங்கில், கருவேலமார், பூலாங்குச்சி, புறாமார், ஈச்சங்குச்சி, உன்னிமார், சங்கங்குச்சி,நாணல் தட்டை போன்றன. மூலப்பொருட்களின் தன்மையைப் பொறுத்து கூடை முடிதல் தொழிலானது நடைபெறுகின்றது. சில மூலப்பொருள்களை சேகரித்து வந்த உடனே கூடை முடைய வேண்டும் (எடுத்துக்காட்டாக நாணல் தட்டை). சில மூலப்பொருட்களை வெயிலில் காய வைத்தால் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும். இல்லையெனில் அக்குச்சியானது உடைந்து விடும் (எடுத்துக்காட்டாக பூலாங்குச்சி, காக்கா மூக்கு செடி போன்றன). சில மூலப் பொருட்களை வெயிலில் காய வைத்துப் பிறகு தண்ணீர் தெளித்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். சில மூலப்பொருட்களை வருடம் முழுவதும் வைத்து பயன்படுத்த முடியும் (எடுத்துக்காட்டாக உன்னைமார் செடி). இவ்வாறு பல வகையான மூலப்பொருட்களைக் கொண்டு வனையப்படும் கூடைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்- அவை கல்யாணக் கூடை, சாமிப் பெட்டி என்று அழைக்கப்படும் ஓலைப் பெட்டி, சாணிக்கூடை, குப்பைக் கூடை, கோழி பஞ்சாரம், உரிக் கூடை, ராட்டை கூடை, அரிசி கூடை , பூக்கூடை, பழக்குடை முதலியன. முற்காலத்தில், மக்களது வாழ்வில் அன்றாட புழங்குபொருளாக இருந்த கூடைகள் இன்று பெரும்பாலும் திருமணம் மற்றும் சிறுதெய்வ வழிபாட்டு நிகழ்வுகளில் பயன்படும் அலங்காரப் பொருட்களாகவும் பண்பாட்டு அடையாளங்களாகவும் மட்டும் திகழ்கின்றன.
தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

மு.சாந்தி

காணொலி

மு.சாந்தி