Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மட்பாண்டங்கள் மற்றும் மண்பொம்மை தயாரித்தல்

Making of Pottery and Terracotta Sculptures

வகை

மட்பாண்டம் / சுடுமண் சிற்பம்


கைவினைப் பொருளின் பெயர்

தெய்வ உருவச் சிலைகள்


கைவினைக் கலைஞர் பெயர்

பிச்சை


பயன்பாடுகள்

சாமி சிலைகள் வழிபாட்டிற்காகவும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. மட்பாண்டங்கள் வீட்டு உபயோக பொருட்களாகப் பயன்படுகின்றன.


ஊர்

விளாச்சேரி

மாவட்டம்

மதுரை

காட்சிப்படுத்தப்படும் இடம்
வீடு
கூடுதல் விவரங்கள்
விளாச்சேரியில் மட்பாண்ட கைவினைஞர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொம்மைகள் மற்றும் மட்பாண்டங்கள் வருடம் முழுவதும் விற்பனையாகின்றன. சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்டக் கலைஞர்கள் பெரும்பாலும் பானைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையே தயாரித்து வந்த நிலையில், அண்மை காலத்தில் இறை உருவ பொம்மைகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

சமீப காலங்களில், நவராத்திரி பண்டிகையின் போது கொலு பொம்மைகள் வைத்து வீடுகளை அலங்கரிக்கும் பழக்கம் மக்களிடையே பிரபலமடைந்து வருவதால், இவர்கள் தயாரிக்கும் பொம்மைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இவர்கள் பெரும்பாலும் அச்சுகளைக் கொண்டு (mold) கொலு பொம்மைகளை தயாரிக்கின்றனர். சுமார் 50 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுள் சிலர் ஒரே மாதிரியான அச்சைக் கொண்டு பொம்மைகளை உருவாக்குகின்றனர். வேறு சிலர் தங்களுக்கென தனித்துவமான அச்சைக் கொண்டு பொம்மைகளை தயார் செய்து வருகின்றனர். மக்கள் வருடா வருடம் புது கொலு பொம்மைகளை வாங்கி சேர்ப்பதும், கொலு பொம்மை தொகுப்புகளாக வாங்கி வைக்கும் வழக்கமும் (கல்யாண செட், கிரிக்கெட் செட்) இவர்கள் தயாரிக்கும் பொம்மைகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.

இவர்கள் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நாட்களை ஒட்டி விநாயகர் சிலைகள், கிருஷ்ணர் சிலைகள், இயேசு கிறிஸ்து சிலைகள் போன்ற சாமி சிலைகளை விற்கின்றனர். மேலும் கிராம கோயில்களில் கொண்டாடப்படும் கோயில் திருவிழாக்களுக்கு தேவையான அக்கினி சட்டி, நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் கால் சிற்பம், குழந்தை சிற்பம், புரவி சிற்பம் போன்ற சுடுமண் சிலைகளையும் இங்கு தயார் செய்கின்றனர்.

விளாச்சேரியில் தயார் செய்யப்படும் இயேசு கிறிஸ்து சிலைகள், மேரி மாதா சிலைகள், இயேசுவின் பிறப்பை காட்சிப்படுத்தும் குடில் தொகுப்பு சிலைகள், இயேசு சிலுவையில் அறையப்பட்ட காட்சி அமைப்பைக் கொண்ட சிலைகள், இயேசுவின் மரணத்தை காட்சிப்படுத்தும் சிலைகள் ஆகியவை கேரளா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கிறிஸ்துவ சிலைகள் பெரும்பாலும் ’பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ என்ற பொருளை கொண்டே செய்யப்படுகின்றன. இவை பொதுவாக நாலு இன்ச் முதல் ஒரு அடி உயரம் வரை உள்ளன.

டிசம்பர் மாதத்தில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொம்மைகளை இவர்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே தயார் செய்து வைத்து விடுகின்றனர். அண்மை காலங்களில் வட இந்திய வியாபாரிகள், இவர்களது அச்சை கொண்டு பொம்மைகள் செய்து குறைந்த விலைக்கு விற்பதால், இவர்களது வியாபாரம் அடிபட்டு போவதாக தெரிவிக்கின்றனர்.
தொழில் முறை
குடிசைத் தொழில்
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

M. ராஜேஸ்வரி, P.பிரியதர்ஷினி

M. ராஜேஸ்வரி, P.பிரியதர்ஷினி

M. ராஜேஸ்வரி, P.பிரியதர்ஷினி

M. ராஜேஸ்வரி, P.பிரியதர்ஷினி