Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தென்னிந்தியத் திருச்சபை தேவாலயம்

C.S.I. Cathedral

தேவாலயத்தின் வகை

தென்னிந்தியத் திருச்சபை (Church of South India)


வேறு பெயர்கள்

சி.எஸ்.ஐ. தேவாலயம்


அமைவிடம்

நரிமேடு


ஊர்

கோரிப்பாளையம்

மாவட்டம்

மதுரை

காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1986
ஆலய வரலாறு / கதைகள்
பொது ஆண்டு 1934ஆம் ஆண்டில் தல்லாக்குளம் திருச்சபை, மதுரை வைகை ஆற்றுக்கு வடபுறத்தில், ’அமெரிக்கன் அருட்பணி இயக்கத்தினால்’ நிறுவப்பட்டது. பொது ஆண்டு 1986ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்கன் கல்லூரி சிற்றாலயத்தில் ஞாயிறுதோறும் காலையில் இரண்டு ஆராதனைகள் நடைபெற்றன. தல்லாக்குளம் திருச்சபைக்கு என்று தனியாக ஆலயம் இல்லை. 30.03.1986-அன்று இந்தப் பேராலயம் தல்லாக்குளத்தில் திறக்கப்பட்டது.
தேவாலயத்தின் அமைப்பு
பேராலயம் நான்கு ஏக்கர் (1.62 எக்டேர்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இப்பேராலயக் கட்டட அமைப்பு ஆழ்ந்த இறையியல் கருத்துகளைக் கொண்டது. திருமறையின் அடிப்படைப் போதனையும், இறையியலும், முன்னாள் கிழக்கு ஜெர்மானிய மக்களின் சிற்பக்கலை, கட்டடக் கலையான "கோத்திக்" கட்டடக்கலையும், தமிழ்ப் பண்பாடும் ஒரு சேர இணைந்து அழகாக உயர்ந்து காணப்படுகிறது. 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோரிப்பாளையம் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் சந்திப்பு
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
நிறைய விடுதிகள் உள்ளன.
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

காணொலி

தெ.துர்கா தேவி