Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கிறைஸ்ட் தி கிங் சர்ச் (Chirst The King Church)

Christ the King Church

தேவாலயத்தின் வகை

தென்னிந்தியத் திருச்சபை (Church of South India)


ஆலயத்தின் சிறப்பு

கொடைக்கானலில் உள்ள தென்னிந்தியத் திருச்சபை (CSI) தேவாலயமான கிறைஸ்ட் தி கிங் சர்ச், ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த ஆலயம் முதலில் பொது ஆண்டு 1895ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் மிஷனால் கட்டப்பட்டது.


வழிபாடு

இந்தத் தேவாலயத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.


ஊர்

கொடைக்கானல்

மாவட்டம்

திண்டுக்கல்

வழிபாட்டுக் காலம்
வியாழக் கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை -காலை 6:30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; பிற்பகல் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரை தேவாலயம் திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் ஆராதனைகள் நடத்தப்படுகிறன.
திருவிழாக்கள் விவரங்கள்
ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1895ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
கல்வெட்டு / செப்பேடு
ரெவரண்ட் சி.என்.பாக்கியநாதன் என்ற கிறிஸ்தவ போதகர் பொது ஆண்டு 1889ஆம் ஆண்டில் பிறந்து 1910ஆம் ஆண்டில் இறைவனடி எய்தினார் என்ற செய்தி இங்குள்ள கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
கிரானைட் கற்களால் கட்டப்பட்ட இந்தத் தேவாலயம் கோத்திக் கட்டடக்கலைக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு
ஆலய வரலாறு / கதைகள்
கொடைக்கானலில் உள்ள CSI தேவாலயமான கிறைஸ்ட் தி கிங் சர்ச், ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கும் அதிகமான வரலாற்றைக் கொண்டுள்ளது. கோக்கர்ஸ் வாக் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம் முதலில் 1895ஆம் ஆண்டில், மதுரை அமெரிக்கன் மிஷனால் கட்டப்பட்டது. மேலும் இத்தேவாலயம் ஒரு காலத்தில் ’யூனியன் சர்ச்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
தேவாலயத்தின் அமைப்பு
கோத்திக் கட்டடக்கலை அமைப்பு
சுருக்கம்
இந்த ஆலயம் முதலில் பொது ஆண்டு 1895ஆம் ஆண்டில், மதுரை அமெரிக்கன் மிஷனால் கட்டப்பட்டது. இந்தத் தேவாலயம் கோத்திக் கட்டடக்கலைக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு ஆகும். தேவாலயத்தின் உள்ளே, அழகான கண்ணாடி வேலைப்பாடு மிக்க சாளரங்கள் மற்றும் பிரதானப் பலிபீடத்தை எதிர்கொள்ளும் மரப் பீடங்கள் போன்றவை உள்ளன. இது கர்த்தராகிய இயேசுவின் உருவத்தைக் காட்டுகிறது. கிறைஸ்ட் தி கிங் சர்ச் எல்லா மதத்தைச் சார்ந்த பக்தர்களையும் வரவேற்கிறது. ஞாயிற்றுக் கிழமை ஆராதனைகளின் போதும், ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போதும், இந்தத் தேவாலயம் அழகாக அலங்கரிக்கப்பட்டு மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருக்கும்.
தகவல்

க.த.காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்