Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சுவிசேஷ லூத்தரன் தேவாலயம்

Evangelical Lutheran Church

தேவாலயத்தின் வகை

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (Tamil Evangelical Lutheran Church)


அமைவிடம்

பாம்பர்புரத்தில் உள்ள சிறிய மலையில் அமைந்துள்ளது.


ஆலயத்தின் சிறப்பு

பொது ஆண்டு 1906இல் பாம்பர்புரத்தில் குடியேறிய ஜெர்மன் மற்றும் ஸ்வீடிஷ் மக்களால் இந்தத் தேவாலயம் நிறுவப்பட்டது. இது நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக இயங்கி வரும் தேவாலயம் ஆகும்.


ஊர்

கொடைக்கானல்

மாவட்டம்

திண்டுக்கல்

வழிபாடு
நோன்பு மற்றும் வேண்டுதல் வழிபாடு
வழிபாட்டுக் காலம்
வியாழன் இரவு 6:30 மணி, மாதத்தின் முதல் சனிக்கிழமை முற்பகல் 10 மணி மற்றும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 2.00 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1906
கல்வெட்டு / செப்பேடு
இந்தத் தேவாலயத்தில் உள்ள கல்வெட்டில்

”JUBILEE-CHURCH.

1. SAM. 7.12.

TRANQUEBAR EV. LUTH. MISSION-BICENTENARY.

9. JULY 1706-1906.

Denkstein gelegt von Herrn Pastor C. Lohmann

24. Mai 1906” என்ற தகவல் வெட்டப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
சிலுவையில் அறையப்பட்ட கர்த்தரின் மரத்தாலான சிலை உள்ளது.
ஆலய வரலாறு / கதைகள்
பொது ஆண்டு 1906இல் பாம்பர்புரத்தில் குடியேறிய ஜெர்மன் மற்றும் ஸ்வீடிஷ் மக்களால் இந்தத் தேவாலயம் நிறுவப்பட்டது. இந்தத் தேவாலயம் நிறுவப்பட்ட அடுத்த ஆண்டே ஜெர்மன், ஸ்வீடிஷ், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் வழிபாட்டுச் சேவைகளை வழங்கத் தொடங்கினர். பொது ஆண்டு 1919இல், ஜெர்மன், டேனிஷ் மற்றும் ஸ்வீடிஷ் போன்ற பல்வேறு லூத்தரன் மிஷனிலிருந்த தமிழ்ச் சபைகள் ஒன்றிணைந்து ’தமிழ் சுவிசேஷ லூத்தரன் தேவாலயத்தை’ (TELC) உருவாக்கினர். பொது ஆண்டு 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தத் தேவாலயத்தின் நிர்வாகம் தமிழ்ச் சமூகத்திடமே ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்ட பாதிரியார்கள் தமிழில் சேவைகள் நடத்தத் தொடங்கினர்.
தேவாலயத்தின் அமைப்பு
இந்தத் தேவாலயத்தில் உருளை வடிவ மணிக் கோபுரம் உள்ளது. நுழைவாயில், சாளரங்கள் மற்றும் மேடையின் முகப்புப் பகுதி ஆகியவை வளைவு வடிவக் (arch) கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன.
சுருக்கம்
கொடைக்கானலில் பாம்பர்புரத்தில் உள்ள சிறிய மலையில் தமிழ் சுவிசேஷ லூத்தரன் தேவாலயம் (TELC) அமைந்துள்ளது. இது ஒரு தனித்துவமான கட்டடக்கலைப் பொக்கிஷமாகும். இந்தத் தேவாலயத்தின் மிகவும் வசீகரமான அம்சம் இதன் உருளை வடிவ மணிக் கோபுரம் ஆகும்.
கூடுதல் விவரங்கள்
பொது ஆண்டு 1923இல் வார்க்கப்பட்ட அசல் தேவாலய மணி மற்றும் இத்தேவாலயத்தை உருவாக்கிய ஜெர்மானிய நிறுவனர்கள் விட்டுச் சென்ற புனிதப் பொருட்கள் ஆகியவை இன்றும் தேவாலயத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த மணியின் மேல் தேவாலயத்தின் பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மணியின் ஓசை 2 கிலோமீட்டர் சுற்றளவு வரை ஒலிக்கிறது. இந்தப் புனிதப் பொருட்கள் தேவாலயத்தின் நீண்டகாலப் பாரம்பரியத்தைக் காட்டும் சான்றாக உள்ளன. இந்தத் தேவாலயம் முற்றிலும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்தத் தேவாலயம், அதன் அசல் அமைப்பை இன்றளவும் பாதுகாத்து வருகிறது.
தகவல்

க.த.காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்