The Catholic Church, Shrine of Holy Mother / Our Lady of Good Health Church
Location
Near Bodinayakkanur old bus stand
Village Name
Bodinayakkanur
District
Theni
ஆலயத்தின் சிறப்பு
நற்கருணைத் திருவிழா, சப்பரத் திருவிழா
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7ஆம் தேதி சப்பரத் திருவிழா, செப்டம்பர் 8ஆம் தேதி மாதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1916இல் கட்டப்பட்டுப் பின்னர் 2003இல் புதுப்பித்துக் கட்டப்பட்டது
சிற்பங்கள்
புனித பதுவை அந்தோணியார், புனித குழந்தை தெரசா, புனித சவேரியார், புனித இராயப்பர், புனித சின்னப்பர், தேவசகாயம் பிள்ளை, புனித செபஸ்தியார், புனித அல்போன்சா மற்றும் அன்னை தெரசா
தேவாலயத்தின் அமைப்பு
மணிக்கூண்டு மற்றும் புனிதர் பூங்கா ஆகியன ஆலயத்தின் முன்பு உள்ளன. ஆலயத்தின் வெளிப்பகுதியில் புனிதர்களுடைய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உருவம் காணப்படுகிறது.
சுருக்கம்
இந்தத் தேவாலயம் ’கத்தோலிக்க திருச்சபை’ மற்றும் ‘புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்’ என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. மணிக்கூண்டு மற்றும் புனிதர் பூங்கா ஆகியன ஆலயத்தின் முன்பு உள்ளன. ஆலயத்தினுடைய வெளிப்பகுதியில் புனிதர்களுடைய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உருவம் உள்ளது. 1916ஆம் ஆண்டில் முதல்முதலாகக் கட்டப்பட்டுப் பின்னர் 2003ஆம் ஆண்டில் புதுப்பித்துக் கட்டப்பட்ட இந்தத் தேவாலயத்தில் புனித பதுவை அந்தோணியார், புனித குழந்தை தெரசா, புனித சவேரியார், புனித இராயப்பர், புனித சின்னப்பர், தேவசகாயம் பிள்ளை, புனித செபஸ்தியார், புனித அல்போன்சா மற்றும் அன்னை தெரசா சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் காலை நற்கருணை ஆராதனை இங்கு நடைபெறுகிறது. பங்கு உருவான நாள் 1990 ஆகும்.
Significance of Church
Eucharist Festival and Chariot Festival
Festivals
The Chariot Festival is celebrated on September 7th every year, followed by the Mother Mary’s Birthday Celebration on September 8th.
Period/ Collector
It was built in the year 1916 CE and later renovated and reconstructed in 2003 CE.
Sculptures
Saint Anthony, Saint Therese of the Child Jesus, Saint Xavier, Saint Peter, Saint Paul, Dev Sahayam Pillai, Saint Sebastian, Saint Alphonsa, and Mother Teresa.
Organization of the Church
The Clock tower and Garden of statues of the Saints are located in front of the church. Inside the church, a statue of Jesus Christ on the crucifix is displayed.
Summary
This church is also known by other names, such as the 'Catholic Church' and the 'Shrine of our lady of good Health .' The clock tower and Saint's Garden are located in front of the church. Statues of saints are placed outside the church. Inside the church, there is a statue of Jesus Christ crucified. Built for the first time in 1916 and later renovated and reconstructed in 2003, this church houses sculptures of Saint Anthony, Saint Therese of the Child Jesus, Saint Xavier, Saint Rayappa, Saint Chinnappa, Dev Sahayam Pillai, Saint Sebastian, Saint Alphonsa, and Mother Teresa. Every Friday morning, the Eucharist Festival is held here.
Inscription / Copper
No
Mural
No
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
Details
Dr.C.Manickaraj
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
போடிநாயக்கனூர் பெருமாள் கோவில், சுப்பிரமணியர் கோவில், பரமசிவன் மலைக்கோவில், போடிநாயக்கனூர் அரண்மனை
Nearby Monuments
Bodinayakanur Perumal Temple, Subramanya Temple, Paramashiva Hill Temple, Bodinayakanur Palace.