இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் பழைமையான தேவாலயம்
வழிபாடு
தற்போது வழிபாட்டில் இல்லை
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1909இல் கட்டப்பட்டிருக்கலாம்.
ஆலய வரலாறு / கதைகள்
இந்தத் தேவாலயம் பொது ஆண்டு 1909இல் கட்டப்பட்டிருக்கலாம் என்பது இப்பகுதி மக்களுடைய கருத்தாக உள்ளது. பொது ஆண்டு 1662இல் பிரியர் என்ற பாதிரியாரும் 1681இல் ரோட்டிரிக் டி அப்ரூ என்பவரும் உத்தமபாளையம் பகுதியில் பல மாதங்கள் தங்கிக் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பினார்கள். இவர்களுக்குப் பின்பு அனேகமான பாதிரியார்கள் உத்தமபாளையத்தில் உள்ள மக்களுக்குக் கல்வியைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். அப்பொழுது இத்தேவாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது
கூடுதல் விவரங்கள்
பழைய விண்ணரசி தேவாலயம் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் பழைமையான தேவாலயம் ஆகும். ரோமன் கத்தோலிக் வழிபாட்டு முறையில் உள்ள இத்தேவாலயம் தற்போது வழிபாட்டில் இல்லை. புதிய விண்ணரசி ஆலயம் இதற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. அதுவே தற்போது இப்பகுதி மக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இயங்கி வருகிறது.
Significance of Church
This is one of the very old churches established in this area.
Worship
It is no longer in worship.
Period/ Collector
It was likely built in the year 1909 CE
Temple History / Stories
It is believed by the people of this area that this church was likely built in the year 1909. In the year 1662, Father Piriyar and in 1681, Rodrick D'Abreu came to Uthampalayam area and stayed for several months and preached Christianity. After them, many priests were involved in educating the people in Uthampalayam. It is believed that the church may have been built during that time.
Additional Information
The Old Vinnarasi Church is the oldest church established in this area. This church, which follows the Roman Catholic style of worship, is no longer in use for worship. A new R.C. Vinnarasi Church has been built nearby, which currently serves as the main place of worship for the people of this area.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
Details
Dr.C.Manickaraj
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திருக்குணகிரிக் குன்று சமணப்பள்ளி, புதிய விண்ணரசி ஆலயம், CSI வகையைச் சேர்ந்த செல்வநாயகம் ஞாபகார்த்த ஆலயம், ஞானம்மன் கோவில், பெருமாள் கோவில், பழமையான பள்ளிவாசல்கள்
Nearby Monuments
Thirugunangiri Hill Jain monastery, New Vinnarasi Temple, CSI Category Selvanayagam Memorial Temple, Gnanammal Temple, Perumal Temple, and the old mosques.