இந்தத் தேவாலயம் விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பழைமையான தேவாலயங்களில் ஒன்று. இத்தேவாலயம் கட்டப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன.
வழிபாடு
உபவாசம், கூட்டு வழிபாடு, சிறப்பு ஆராதனை, சிறப்புத் திருப்பலி உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் இங்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன
வழிபாட்டுக் காலம்
ஆங்கில மாதத்தின் முதல் நாள் காலை 4.30 மணிக்குத் திருவிருந்து ஆராதனை, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு காலை 7:30 மணிக்குத் திருவிருந்து ஆராதனை, ஞாயிறுதோறும் காலை 10 மணிக்குச் சிறுவர்களுக்கான ஞாயிறு கிறித்துவக் கல்வி, ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு ஜெப வளைய ஐக்கியம் (சங்கிலி ஜெபம்), மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணிக்கு உபவாசக் கூடுகை ஆகியவை நடைபெறும். மாதத்தின் நாலாவது வெள்ளி இரவு 8 மணி முன்னிரவு விழிப்பு ஜெபம் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 27ஆம் நாள் ஆலய ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது. அன்று ஊர்ப் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இது ஐக்கிய விருந்து என்று அழைக்கப்படுகிறது. அடுத்தபடியாகக் கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ் நாளானது மிகக் கோலாகலமாக இங்குக் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. புனித வெள்ளி அன்று மக்கள் உபவாசம் இருந்து கிறிஸ்தவத்தை நினைவு கூறுகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையன்று இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடித்துக் காட்டப்படுகிறது. முக்கியமாக தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தேவாலயத்தில் பொங்கல் வைத்து சிறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. தமிழரின் பாரம்பரியம் பண்பாடு ஆகியவைகள் அப்போது விவரிக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
இந்தத் தேவாலயமானது 27. 5. 1886 அன்று அமெரிக்க ஐக்கிய மாகாணம் கான்நாடு கில்போர்ட் பட்டணத்து மிஷனரி ரேச்சல் சுமித் அம்மையார் அவர்களால் நிறுவப்பட்டது.
சுவரோவியம்
இயேசுவின் பிறப்பு மற்றும் அவரின் அருட்பணிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் சுவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
குழந்தை இயேசு உருவத்துடன் மேரி மாதா சிலையும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிற்பமும் உள்ளன.
ஆலய வரலாறு / கதைகள்
இந்தத் தேவாலயம் பொது ஆண்டு 1886ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய மாகாணம் கில்போர்ட் பட்டணத்து மிஷனரி, ரேச்சல் சுமித் அம்மையார் அவர்களால் கட்டப்பட்டது. தொடக்கத்தில் ஓட்டுக் கட்டடத்துடன் இருந்த இந்தத் தேவாலயமானது பின்னாளில் சிறிது சிறிதாகக் கல் கட்டடமாக மாற்றப்பட்டது. 27.05.2000 அன்று மற்றொரு கோபுரம் சிவகாசியைச் சேர்ந்த பேபி இந்திராணி செல்லத்துரை அவர்கள் நினைவாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் மதுரை இராமநாதபுரம் திருமண்டலப் பேராயர் முனைவர் எட்வின் ஏசுராஜ் அவர்களால் இரண்டாவது முறையாகப் பொது ஆண்டு 2015ஆம் ஆண்டு தேவாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தேவாலயத்தின் அமைப்பு
இந்த தேவாலயத்தில் வளைவு வடிவமைப்புகளுடன் 2 கோபுரங்கள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இத்தேவாலயம் இப்பகுதிக்கு அருகில் உள்ள கல்லு மடம், கல்யாணசுந்தரம், உசிலம்பட்டி, வேலாவூரணி, பூமாலைப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக உள்ளது.
Significance of Church
This church is one of the oldest churches in Virudhunagar district. It has been 138 years since its construction.
Worship
Fasting, communal prayers, special worship, special mass, and other forms of worship are observed here.
Worship period
The Holy Communion service is held at 4:30 AM on the first day of the English month. On the first and third Sundays of the month, the Holy Communion service takes place at 7:30 AM. Every Sunday at 10 AM, Sunday School for children is conducted, followed by the Prayer Circle Union (Chain Prayer) at 12 PM. The Fasting Prayer Meeting is held on the second Saturday of the month at 10 AM. On the fourth Friday of the month, a night vigil prayer is conducted at 8 PM.
Festivals
Every year on May 27th, the church anniversary is celebrated grandly. On this day, a community feast is organized for all the villagers, known as the "United Feast." Christmas, celebrating the birth of Christ, is also observed with great enthusiasm. Throughout December, each day is marked as a special occasion.
On Good Friday, the faithful observe fasting in remembrance of Christ’s sacrifice. On Easter, a theatrical enactment of Jesus' life is performed. Most notably, on the Tamil festival of Thai Pongal, a special event is held at the church, where Pongal (a dish made of cooked rice) is prepared and Tamil heritage and traditions are highlighted.
Period/ Collector
This church was established on May 27, 1886, by missionary Rachel Smith from Guilford, United States.
Mural
The birth of Jesus and his divine ministries have been depicted as wall paintings in recent times.
Sculptures
The statue of Mother Mary with infant Jesus and a sculpture of Jesus on the cross are present.
Temple History / Stories
This church was built in the year 1886 by the missionary Rachel Smith from Guilford Town, United States of America. Initially, it was a thatched-roof structure, but over time, it was gradually transformed into a stone building. On 27.05.2000, another tower was expanded in memory of Baby Indirani Sellathurai from Sivakasi. Furthermore, the church was expanded for the second time in the year 2015 by Dr. Edwin Yesuraj, the Bishop of the Madurai-Ramanathapuram Diocese.
Organization of the Church
This church features two towers with arched architectural designs.
Additional Information
This church serves as a significant place of worship for the Christian communities from the nearby villages of Kallu Madam, Kalyanasundaram, Usilampatti, Velavoorani, and Poomalaipatti.