சின்னப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த புனித உபகாரமாதா ஆலயமானது வைர விழாவை கண்ட தேவாலயமாகும்.
வழிபாடு
குழந்தை இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்மஸ் விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தேவாலயத்தில் குடில் அமைக்கப்பட்டு, வீடுகளில் நட்சத்திர விளக்கு கட்டப்படுகிறது. டிசம்பர் 25ஆம் தேதி, கிறிஸ்மஸ் தினத்தன்று நள்ளிரவில் இயேசு கிறிஸ்து பிறந்த பின் கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பின்னர் மூன்று நாள் கழித்து 'மாசில்லா குழந்தைகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் செய்திக்கேற்ப, இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்த சமயத்தில், ஏரோது மன்னரால் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவு கூறும் வகையில், இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குழந்தைகள் உள்ள வீடுகளிலும், சிறு வயதிலேயே இறந்து போன குழந்தைகளின் வீடுகளிலும் இருந்து தேவாலயத்திற்கு காணிக்கை வழங்கப்பட்டு, மற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. இந்த நாள் முக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. சில தினங்கள் கழித்து மூன்று ராஜா விழா நடைபெற்று, அதன்பின் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அமைக்கப்பட்ட குடில்கள் மற்றும் நட்சத்திர விளக்குகள் கழற்றப்படுகின்றன.
வழிபாட்டுக் காலம்
நாள்தோறும் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெறுகிறது. மேலும் வாரத்தில் ஒரு முறை தேவாலயத்தின் தந்தை பிரார்த்தனை திருப்பலியை நடத்தி வைப்பார்.
திருவிழாக்கள் விவரங்கள்
நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருவிழா கொண்டாடப்படுகிறது. டிசம்பர் மாதம் கிறிஸ்துவின் பிறப்பு நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி 1 ஆம் தேதி குழந்தை இயேசுக்கு பெயர் வைக்கும் விழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும், புனித வெள்ளி, உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (ஈஸ்டர்) உள்ளிட்டவை சின்னப்பட்டி தேவாலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதைத்தவிர மே மாதம் தேவாலயத் திருவிழா நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் அனைவரும் எவ்வித பிரிவினையும் இன்றி ஒன்றாக கலந்து கொள்ளுகின்றனர்.
கூடுதல் விவரங்கள்
இயேசு கிறிஸ்துவின் தாயாரான மேரி மாதா அவர்களின் திருக்கோவில் என்பதால் இது ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆகும். தேவாலயத்தின் முகப்பு பகுதியில் மேரி மாதாவின் சுதைச் சிற்பம் காணப்படுகிறது.
Significance of Church
This holy Our Lady of Perpetual Help Church located in Chinnapatti village is a temple that has celebrated the Diamond jubilee.
Worship
To celebrate the birth of Baby Jesus Christ, a crib is set up in the church a week before Christmas, and star lights are placed in homes. On December 25, Christmas Day, after the birth of Jesus Christ at midnight, the Christmas festival is celebrated grandly.
Three days later, 'Massilla Children’s Day' is observed. According to the Bible, this day commemorates the children killed by King Herod at the time of Jesus Christ’s birth on earth. On this day, offerings are brought from homes with children and from homes of children who died young to the church, and food is given to other children. This day is observed as an important occasion. A few days later, the Three Kings Festival is held, after which the cribs and star lights set up for Christmas are removed.
Worship period
Daily prayers are held in the church. Additionally, once a week, the priest conducts a special prayer service in the church.
Festivals
On November 2nd, the cemetery festival is celebrated. In December, the birth of Christ is celebrated grandly. On January 1st, the naming ceremony for baby Jesus is also celebrated. Additionally, Good Friday, the Resurrection Festival, or Easter is celebrated grandly at Chinnapatti Church. Besides these, the church festival is held in May. During this, all the public participate together without any distinction.
Additional Information
Since this is the church of Mary, the mother of Jesus Christ, it is a Roman Catholic Church. In the front area of the church, a statue of Mary is seen.