Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புனித சூசையப்பர் ஆலயம்

St. Joseph's Church

தேவாலயத்தின் வகை

ரோமன் கத்தோலிக்


வேறு பெயர்கள்

புனித வளனார் ஆலயம், செயின்ட் ஜோசப் தேவாலயம் (St. Joseph Church).


அமைவிடம்

இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.


ஊர்

சமயநல்லூர்

மாவட்டம்

மதுரை

ஆலயத்தின் சிறப்பு
நூற்றாண்டு சிறப்பு வாய்ந்தது
வழிபாடு
திருப்பலி நடத்தி, மெழுகுவத்தி ஜெபம் செய்து, பைபிள் வாசித்து வழிபாடு செய்யப்படுகிறது.
வழிபாட்டுக் காலம்
காலை 5.00-6.30 மற்றும் மாலை 6.30-7.30 வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 20 ஆம் நூற்றாண்டு
சிற்பங்கள்
குழந்தை இயேசு, மேரி மாதா மற்றும் சூசையப்பரின் சிற்பங்கள் காணபப்டுகின்றன.
ஆலய வரலாறு / கதைகள்
பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுக்கோட்டை பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறிய சில கதோலிக்க விவசாயிகள், வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டார்கள். பின்னாட்களில், மதுரை சாலையில் இரண்டு பருத்தி நூற்பாலைகள் தொடங்கப்பட்டதால், சிவகங்கை பகுதியில் இருந்து பலர் இங்கு வந்து குடியேறினர். இதன் மூலம் இந்த கிராமத்தின் மக்கள் தொகையும் முக்கியத்துவமும் வளர்ந்தது. பின்னர் பொது ஆண்டு 1910ஆம் ஆண்டு இந்த பங்கு (Parish) நிறுவப்பட்டது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தேவாலயத்தின் அமைப்பு
தேவாலத்தின் நுழைவாயிலின் இருபுறங்களிலும் தேவதூதர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. நுழைவாயிலுக்கு அருகில் கொடிமரம் வைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் வலப்பக்கம் தூய பாத்திமா அன்னைக்கான செயற்கை குகை ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பகுதியில் இயேசுவின் சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் வளாகத்தில் தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி, சமய குருமார்களின் மன்றம் மற்றும் தங்குமிடம் அமைந்துள்ளது. இத்தேவாலயம் செவ்வக வடிக அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் கோபுரம் செங்குத்தான கூம்பு வடிவை கொண்டுள்ளது. மேலும் அழகாக வடிவமைக்கப்பட்ட வளைவு (ஆர்ச்) ஜன்னல்களும் இங்கு காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
பொது ஆண்டு 1910ஆம் ஆண்டில் இப்பகுதியில் பங்கு (parish) நிறுவப்பட்டது. இதன் முதல் பங்குதந்தையாக பாதிரியார் பிரின்ஸ், S.J. அவர்கள் நியமிக்கப்பட்டார். பொது ஆண்டு 1923ஆம் ஆண்டு, பாதிரியார் ராஜா அதிசயம், S.J., தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பொது ஆண்டு 1932ஆம் ஆண்டில் தேவாலயத்தின் கட்டுமானத்தை பாதிரியார் சி. மொண்டாட், S.J., நிறைவு செய்தார்.

பாதிரியார் டி. குரியு, S.J., தேவாலய உச்சி கோபுரத்தை எழுப்பினார். பாதிரியார் பீட்டர் ராய் சமய குருமார்களின் மன்றத்தையும், பள்ளி கட்டிடத்தையும் மேம்படுத்தினார். பாதிரியார் அருள் ராயன், பி. பிண்டோ, மற்றும் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் சபையின் ஆன்மீக நிலையை உயர்த்த பணியாற்றினர். சுமார் 18 ஆண்டுகள் இந்த பங்கில் பணியாற்றிய பாதிரியார் அலெக்சிஸ், தேவாலத்தைச் சார்ந்த பள்ளிக்காக இரு மாடி கட்டடம் கட்டினார், தூய பாத்திமா அன்னைக்கான செயற்கை குகை ஆலயம் அமைத்தார், மேலும் தேவாலயத்தை விரிவாக்கும் பணிகளையும் மேற்கொண்டார்.

பாதிரியார் லூர்து உபகாரம் காலத்தில் தேவாலயத்தின் பொன் விழா கொண்டாடப்பட்டது; அவர் தேவாலயத்தையும் பாதிரியார் அலுவலகத்தையும் புதுப்பித்து, பாதிரியார் அலுவலகத்திற்கும் பிரதான சாலைக்கும் இடையில் ஒரு பாதையை அமைத்தார், சுற்றுச்சுவரை கட்டினார், தோடனேரி மற்றும் கிளாமத்தூரில் தேவாலயங்களை கட்டினார்.

தற்போது இந்த பங்கில் 510 குடும்பங்கள் உள்ளன. இந்த பங்கில் சோழவந்தான், உர்மாசிக்குளம், கீழமத்தூர், எம்.ஜி.ஆர். நகர், மண்ணடிமங்கலம் மற்றும் தோடனேரி ஆகிய துணை மையங்களில் சிற்றாலயங்கள் உள்ளன. சிற்றாலயங்கள் இல்லாத துணை மையங்கள்: பரவை, பரவை காலனி மற்றும் முல்லிப்பள்ளம் ஆகும்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்
சமயநல்லூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சமயநல்லூர் தொடர் வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

தேவா

தேவா

காணொலி

தேவா