Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சி.எஸ்.ஐ. துவக்கப்பள்ளி

Church of South India Primary school

தேவாலயத்தின் வகை

தென்னிந்தியத் திருச்சபை


வேறு பெயர்கள்

சி.எஸ்.ஐ.


அமைவிடம்

முத்தாலம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது.


ஊர்

கீழத்திருமாணிக்கம்

மாவட்டம்

மதுரை

ஆலயத்தின் சிறப்பு
சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தேவாலயம்.
வழிபாட்டுக் காலம்
தற்போது இந்த தேவாலயத்தில் வழிபாடுகள் அதிகம் நடைபெறுவதில்லை.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1898
கல்வெட்டு / செப்பேடு
இந்த தேவாலயத்தில் உள்ள கல்வெட்டில் 'மதுரை அமேரிக்கன் மிசன் கோயில் (ICP) 12.02.1898' என்று எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மதுரை அமேரிக்கன் மிஷன் என்பது தென்னிந்தியாவில் பொது ஆண்டு 1834 ஆம் ஆண்டில், ஏ.பி.சி.எஃப்.எம். (ABCFM) என்ற பிறநாடுகளுக்கு மறைப்பணியாளர்களை அனுப்பும் அமெரிக்க அமைப்பு மூலம் நிறுவப்பட்டது.

இந்த இயக்கம், பொது ஆண்டு 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் கல்வி, சுகாதாரம், மற்றும் கிறிஸ்தவ பிரசங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இது அக்காலத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிறுவி சமூக சேவையில் ஈடுபட்டது. இவ்வியக்கத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பணி செய்த மிஸ்ஸஸ் கேப்ரான் போன்றோர் பெண்கள் பள்ளிகளை நடத்தினர். அதன்மூலம் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் சிலர் தனிநபர் வீடுகளுக்கே சென்ற பெண்களுக்கு மத போதனைகள் மற்றும் கல்வி ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த இயக்கத்தால் துவங்கப்பட்ட பள்ளிகளில் சில 'மதுரை அமெரிக்கன் காலேஜ்’ போல பெரிய கல்வி நிலையங்களாக வளர்ந்தன. இதைத் தவிர இவர்கள் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றையும் நிறுவினர். இந்த இயக்கம், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட குழுக்களுடன் தொடர்பு கொண்டு புதிய கிறிஸ்துவர் குழுக்களை உருவாக்கியது. இதன் செயல்பாடுகள் ABCFM ஆண்டு அறிக்கைகள், J. H. Chandler எழுதிய History of the ABCFM, மற்றும் Daniel Jeyaraj போன்ற ஆய்வுகளில் பதிவாகியுள்ளது.
தேவாலயத்தின் அமைப்பு
இந்த தேவாலயத்தில் பலிபீடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. ஆனால் சிற்பங்கள் ஏதுமில்லை.
கூடுதல் விவரங்கள்
இந்தத் தென்னிந்திய திருச்சபை பொது ஆண்டு 1898 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. சில காலம் தேவாலயமாக செயல்பட்டு வந்த இத்தலம் தற்போது துவக்கப்பள்ளியாக இயங்கி வருகிறது.

சி.எஸ்.ஐ.பி.எஸ். என்று அழைக்கப்படும் இந்த தென்னிந்திய திருச்சபை துவக்கப்பள்ளி பொது ஆண்டு 1919இல் துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சேடப்பட்டி ஒன்றியத்தில் அரசு உதவியுடன் இயங்கி வரும் இந்த துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சிறுவர்கள் மற்றும் சிறுமியர் இருவருக்கும் தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பள்ளி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்

க.த. காந்திராஜன்

அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்