தேவாலயத்தின் வகை
ரோமன் கத்தோலிக்
வேறு பெயர்கள்
செயிண்ட் மேரிஸ் பேராலயம்
அமைவிடம்
மதுரை நகரின் மையப் பகுதியில் உள்ளது
ஊர்
மகாலிப்பட்டி
மாவட்டம்
மதுரை
மதுரையின் மையத்தில் எழுந்து நிற்கும் செயிண்ட் மேரிஸ் பேராலயம் (St. Mary’s Cathedral) மதுரையின் பழமையான கிறிஸ்தவக் கோயில்களில் ஒன்றாகும். இதன் கட்டிடக்கலை, மத நம்பிக்கையும், ஐரோப்பியக் கலைப்பாணியும் சங்கமிக்கும் அழகிய சின்னமாக விளங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பேராலயம் மதுரையின் கிறிஸ்தவ சமூகத்தின் இதயமாக இருந்து வருகிறது. இது ஆன்மீக வாழ்க்கையின் மையமும்,சமூக ஒற்றுமையின் சின்னமுமாக திகழ்கிறது.
1840ஆம் ஆண்டு — அருட்தந்தை ஜோசப் பெர்ட்ராண்ட், எஸ்.ஜே., (Fr. Bertrand SJ)
‘புதிய மதுரை மிஷன்’ என அழைக்கப்பட்ட புனித முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நிலத்தை வாங்கினார்.1841ஆம் ஆண்டு, அருட்தந்தை லூயி கார்னியர், எஸ்.ஜே.,( Fr. Garnier) திருச்சியின் பேராலயத்தை முன்மாதிரியாகக் கொண்டு சிறிய கிறிஸ்தவ ஆலயத்தை நிர்மாணித்தார். “1855-ல் அருட்தந்தை ட்ரின்கால், எஸ்.ஜே. (Fr. Trincal) அவர்களின் காலத்தில்,இந்தப் பகுதியிலுள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 600-இல் இருந்து 2,500-ஆக உயர்ந்தது.அதன் பின்பு, 1879 முதல் 1885 வரை,அருட்தந்தை இப்பொலைட் பிளாங், எஸ்.ஜே. அவர்கள் ரோமன் பாணியில் இரண்டு உயர்ந்த மணி கோபுரங்களை எழுப்பினார்.அந்தக் கோபுரங்கள் இன்றும் மதுரையின் வானளாவிய அடையாளங்களாக நிற்கின்றன.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையின் பெரிதாக வளர்ந்த கிறிஸ்தவ சமூகத்திற்காக ஒரு புதிய, பெரிய கோத்திக் பாணி ஆலயம் திட்டமிடப்பட்டது.
1912-ஆம் ஆண்டில், ‘Our Lady of Seven Dolours’ திருநாளன்று அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் 1914-ல் முதல் உலகப் போர் வெடித்ததால்
ஐரோப்பாவில் இருந்து வரவிருந்த நிதி தடைபட்டது.அப்போதைய மேற்பார்வையாளர் அருட்தந்தை பிளாஞ்சார்ட், எஸ்.ஜே.,( Fr. Planchard) தன்னுடைய நம்பிக்கையை இழக்காமல், ஒரு நிலத்தை விற்று கட்டுமானத்தைத் தொடர்ந்து முடித்தார்.1916 ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மன்சிக்னர் ஃபைசாண்டியர், எஸ்.ஜே. (Msgr. Faisandier ) அவர்கள் இந்த ஆலயத்தை ஆசீர்வதித்தார்.
இதன் வடிவமைப்பாளர் மிஸ்டர் சவரிமுத்து, செயிண்ட் ஜோசப் கல்லூரி கட்டிடங்களுக்கும் புகழ்பெற்றவர். பின்னர் மதுரை மறைமாவட்டம் தனித்த துறையாக உருவானபோது, மன்சிக்னர் லெனார்ட், எஸ்.ஜே. (Msgr. Leonard sj.) அவர்கள்
இத்தலத்தை ‘புரோ-கத்தீட்ரல்’ என அறிவித்தார்.அருட்தந்தை அடைக்கலம், எஸ்.ஜே. அவர்களின் காலத்தில் பெரிய கோபுரங்களும், விரிவாக்கத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. 1969-ல், மன்சிக்னர் ஜஸ்டின் திராவியம் தலைமையில்,
ரோமா புனித திருச்சபையின் அனுமதியுடன்,‘Our Lady of Dolours’ அதிகாரப்பூர்வமாக
மதுரை பேராலயமாக உயர்த்தப்பட்டது.”
செயிண்ட் மேரிஸ் பேராலயம் ஒரு கலாபூர்வக் கதை. கோத்திக் பாணி வளைவு கூரை, உயர்ந்த வளைந்த கூரைகள், நீளமான தூண்கள், நுணுக்கமான பளிங்கு வேலைப்பாடுகள் ஆகியவை ஒருங்கிணைந்துள்ளன. ரோமன் மற்றும் நியோ-ரோமானெஸ்க் பாணிகளின் அம்சங்களும் கலந்துள்ளதால், இது தனித்துவமான ஐரோப்பியக் கலையின் வடிவமாக திகழ்கிறது. கோபுரங்கள் வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன; அவை மதுரையின் நகரப்பகுதியை அழகாக ஆக்குகின்றன. உள்புறத்தில் அமைந்துள்ள நிறமுடைய கண்ணாடி ஜன்னல்கள் பைபிள் கதைகளையும், புனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களையும் வெளிப்படுத்துகின்றன. சூரியஒளி அதில் படும்போது, கல்லால் ஆன சுவர்களில் வண்ண ஒளி பிரதிபலிப்புகள் உருவாகும் — இது பேராலயத்தின் ஆன்மீகத் தன்மையை உயர்த்துகிறது.
தரை மற்றும் பேராலயத்தின் உள்புறம், மணிக்கோபுரம், படிக்கட்டு போன்றவை மிக நுணுக்கமான கைவினை நயத்துடன் செய்யப்பட்டுள்ளன; ஒவ்வொரு கல்லும் கைவினைஞர்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. ஆலயத்தின் முன்புறம் கோத்திக் வளைவுகள், அலங்கார சிற்பங்கள், தூண் மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
க.த. காந்திராஜன்
| பெரியார் பேருந்து நிலையம் |
| மதுரை |
| மதுரை |
மீடியா கோப்புகள் இல்லை