Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இன்னாசியார் கோயில்

St. Ignatius Church

தேவாலயத்தின் வகை

ரோமன் கத்தோலிக்


வேறு பெயர்கள்

செயின்ட் இக்னேஷியஸ் தேவாலயம்


ஆலயத்தின் சிறப்பு

இப்பகுதி மக்கள் சாதி, மதம் பேதம் இன்றி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.


ஊர்

நென்மேனி

மாவட்டம்

விருதுநகர்

வழிபாடு
திருச்சபையில் பைபிள் போற்றப்படுகிறது. வழிபாட்டில் விளக்கேற்றப்படுகிறது.
வழிபாட்டுக் காலம்
ஞாயிறு தோறும் வழிபாட்டு ஆராதனை கூட்டங்கள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் திருவிழா நடைபெறும். திருவிழாவின் தொடக்கமாக இத்தேவாலயத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன் பின்பு சிறப்பு ஆராதனை கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 19ம் நூற்றாண்டு, ஆங்கிலேயர் காலம்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
குழந்தை இயேசு உருவத்துடன் மேரி மாதா சிலை, இயேசுவின் சிற்பம் மற்றும் பாதிரியார்களின் சுதை சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக செயின்ட் இக்னேஷியஸ் அவர்களின் சிற்பமும் காணப்படுகிறது.
தேவாலயத்தின் அமைப்பு
தேவாலயத்தின் நுழைவாயிலின் இருபுறமும் கோபுரம் (டவர்) போன்ற வடிவமைப்புகள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று அடுக்குகளாக, மொத்தம் ஆறு சுதைச் சிற்பங்கள் உள்ளன. தேவாலயத்தின் முன்பு ஒரு உலோகத்தாலான கொடிமரம் உள்ளது. தேவாலயத்தின் முன் ஒரு நீண்ட மண்டபமும் உள்ளது, அதில் பாதிரியார்களின் சிற்பங்கள் உள்ளன. தேவாலயத்தின் பழைய கட்டிடம் தற்போது சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இது, புதிய கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ளது. பராமரிக்கப்பட்ட புதிய கட்டிடமே தற்போது வழிபாட்டில் இருக்கிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
சாத்தூர்
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்