Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புதிய விண்ணரசி தேவாலயம்

New Vinnarasi Church

தேவாலயத்தின் வகை

ரோமன் கத்தோலிக்


வேறு பெயர்கள்

விண்ணரசி தேவாலயம்


அமைவிடம்

உத்தம்பாளையம் கிராம சாவடி அருகே உள்ளது.


ஊர்

உத்தமபாளையம்

மாவட்டம்

தேனி

வழிபாடு
திருபலி மற்றும் ஆராதனைகள்.
வழிபாட்டுக் காலம்
எல்லா நாட்களிலும் வழிபாடு நடைபெறும். கிறிஸ்தவ சமயத்தின் சிறப்பு நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆங்கில வருடப்பிறப்பு, புனித வெள்ளி, ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1979
சிற்பங்கள்
இந்த தேவாலயத்தில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவாலயத்தின் நுழைவாயிலில் அன்னை மரியாள் சிற்பம் காணப்படுகிறது. தேவாலயத்தின் வெளியில் உள்ள குகை போன்ற அமைப்பில் இயேசுவின் காயப்பட்ட உடல் சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தினுள் இயேசு சிலுவையில் அறையப்பட்டது போன்ற சிறப்பமும், அன்னை மரியாள் சிற்பமும், புனிதர்கள் சிற்பங்களும் காணப்படுகின்றன.
ஆலய வரலாறு / கதைகள்
பழைய விண்ணரசி தேவாலயம் மிக சிறிய அளவில் இருந்ததால், அதிகளவில் மக்கள் கூடி தொழுகை நடத்த முடியவில்லை. எனவே, புதிய விண்ணரசி தேவாலயக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் அமைப்பு
தேவாலயத்திற்கு முன்பாக கெவி/ குகை போன்ற அமைப்பு உள்ளது. உள்ளே வழிபட்டு கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கூடுதல் விவரங்கள்
இந்த புதிய விண்ணரசி தேவாலயம், மதுரை ஆர்ச் பிஷப் P. J. திரவியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தேவாலயத்தின் வழிபாட்டு மண்டபத்தில் படிகளுடன் கூடிய மேடை அமைப்பு காணப்படுகிறது. இது அரை குவிமாட வடிவத்தை கொண்டுள்ளது. இம்மேடையின் சுவற்றில் ஐந்து பொந்துகளில் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. பொது ஆண்டு 1986 முதல் அனுமந்தபட்டி பங்கில் இருந்து உத்தமபாளையம் தனி பங்காக பிரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
உத்தமபாளையம் சமனப்பள்ளி, ஞானம்மாள் கோயில், பெருமாள் கோயில் மற்றும் பழமையான பள்ளிவாசல்கள் உள்ளன.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உத்தமபாளையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி மற்றும் போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உத்தமபாளையம்
புகைப்படங்கள்

ப. பிரதீப்

ப. பிரதீப்

ப. பிரதீப்

ப. பிரதீப்

ப. பிரதீப்