Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாசிக் களரி விழா

Masi Kalari Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

திருவிழாவின் மூலம் பனையூரைச் சுற்றியுள்ள 21 ஊர்களின் மக்களிடையே இருக்கக்கூடிய சுமூக உறவு மேம்படுகிறது.


நடைபெறும் இடம்

குருநாதன், அங்காளபரமேஸ்வரி மற்றும் சுடலைமாடன் கோயில்


நடைபெறும் தருணங்கள்

மாசி மாதம்


ஊர்

பனையூர்

மாவட்டம்

விருதுநகர்

பாலினம்
ஆண்
விழாவின் தொன்மை
சுமார் 400 ஆண்டுகளாக இந்த மாசிக் களரித் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஊர்மக்கள் கூறுகின்றனர்.
விரத முறைகள்
மாசி மாதம் அமாவாசைக்கு ஏழு நாட்களுக்கு முன்பு காப்புக் கட்டி நோன்பிருக்கின்றனர். நோன்பு நாட்களில் சைவ உணவு மட்டுமே உட்கொள்கின்றனர். காப்புக் கட்டிய பின்பு நோன்பு நாட்களில் வெளியூர் சென்று யாரும் தங்கக்கூடாது. காலையில் வெளியூருக்குப் பணிக்குச் செல்பவர்கள் மாலையில் வீடு திரும்ப வேண்டும் என்பது இவ்வூர்க் கட்டுப்பாடு.
பலியிடல்
கோயிலில் சுடலைமாடன் சாமிக்கு ஆடும் கோழியும் பலியிடுகின்றனர்.
நேர்த்திக்கடன்
இக்கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், மணி எடுத்து வைத்தல், விளக்கு எடுத்து வைத்தல், குழந்தையைக் கரும்புத் தொட்டிலில் இடுதல், அன்னதானம் வழங்குதல் ஆகிய நேர்த்திக்கடன்களைச் செய்கின்றனர்.
குறி சொல்லும் முறை
குறி சொல்லும் முறை இல்லை. மாசிக் களரித் திருவிழாவின்போது பூசாரி அருள் வாக்குச் சொல்கிறார்.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
திருவிழாவின் இரண்டாம் நாளில் திரைப்படம் திரையிடப்படுகிறது. மூன்றாம் நாளில் நாடகம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
திருவிழாவின் முதல் நாளன்று சக்தி பூசை, சக்தி கரகம், குண்டாற்றிலிருந்து நீர் எடுத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இரண்டாவது நாளன்று சக்தி கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாவது நாளன்று குதிரை மற்றும் காளை ஊர்வலம் நடைபெறும். மாலையில் குத்துவிளக்குப் பூசை நடைபெறும். நான்காம் நாளன்று பொங்கல் வைத்துக் கிடாய் வெட்டுதலும், ஐந்தாம் நாளன்று மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
சிறப்பம்சங்கள்
இந்தத் திருவிழா ஊரில் உள்ள 24 மனை தெலுங்குச் செட்டியார் பங்காளிகளால் நடத்தப்படுகிறது. இத்திருவிழா, இந்த ஊருக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் நத்தம் என்ற ஊருடன் தொடர்புபடுத்தி நடத்தப்படுகிறது. திருவிழாவின் இரண்டாம் நாள் திருவிளக்குப் பூசை முடிந்தவுடன் அருகில் இருக்கக்கூடிய பிள்ளையார் நத்தம் ஊரில் இருந்து பூசைத் தட்டுகள் கொண்டுவரப்பட்டு அவற்றுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு அம்மன் மற்றும் குருநாதன் விக்கிரகங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக் கோவிலைச் சென்றடையும். அதன் பின் மறுநாள் பொதுமக்கள் பொங்கலிட்டுத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவர். இந்தப் பாரம்பரியம் பலகாலமாகத் தொடர்கிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

திருப்பதி, வரலாற்று ஆர்வலர்

திருப்பதி, வரலாற்று ஆர்வலர்

திருப்பதி, வரலாற்று ஆர்வலர்

திருப்பதி, வரலாற்று ஆர்வலர்