Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மந்தையம்மன் கோயில் திருவிழா

Mandaiamman Temple Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

மழை வேண்டி இத்திருவிழா நடத்தப்படுகிறது.


நடைபெறும் இடம்

வருசநாடு


நடைபெறும் தருணங்கள்

புரட்டாசி மாதம், முதல் வாரம் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.


ஊர்

வருசநாடு

மாவட்டம்

தேனி

பாலினம்
பெண்
விழாவின் தொன்மை
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இத்திருவிழா கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.
விரத முறைகள்
திருவிழாவின் போது காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர்.
பலியிடல்
ஆடு மற்றும் கோழி பலியிடப்படுகின்றன.
நேர்த்திக்கடன்
பக்தர்களின் வசதிக்கேற்ப நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
குறி சொல்லும் முறை
திருவிழாவின் போது குறி சொல்லும் முறை இல்லை.
பொறுப்பாளர்
பிற
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
இத்திருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். திருவிழா தொடங்கியதும் விரதம் இருந்த பொதுமக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்வர். அதைத்தொடர்ந்து மந்தை அம்மன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூசைகள் நடைபெறும். இவ்விழாவில் வருசநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், தும்மகுண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொள்வர். திருவிழாவின் போது கறி விருந்து படைக்கப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

காணொலி

மூ.செல்வம்