Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வளரித் திருவிழா

Festival of Valari

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

மக்கள் வேண்டிக் கொண்டது நிறைவேறும் என்பது நம்பிக்கை.


நடைபெறும் இடம்

நத்தப்பட்டியில் உள்ள பட்டவன் சாமி கோயிலில் நடைபெறும்.


நடைபெறும் தருணங்கள்

தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும்.


ஊர்

நத்தப்பட்டி

மாவட்டம்

மதுரை

பாலினம்
ஆண்
விழாவின் வரலாறு / கதை
நத்தப்பட்டியைக் காத்துவந்த காவல் வீரனின் மரணத்தின் நினைவாக அவரது வம்சாவளிகள் கொண்டாடத் தொடங்கிய இந்த வளரித் திருவிழாவைப் பின்னர் ஊர் மக்கள் அனைவரும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. வளரி செய்து வைத்தால் தங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு ஊர்மக்கள் வளரி செய்து வைக்கின்றனர். அருகில் உள்ள கோவிலாங்குளத்திலும் இதுபோன்ற வழிபாடு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் தொன்மை
இது குறைந்தது முந்நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த விழாவாகக் கருதப்படுகிறது .
விரத முறைகள்
ஒரு வாரம் காப்புக்கட்டி நோன்பு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
பலியிடல்
திருவிழா முடிந்த அடுத்த நாள் சேவலும் கிடாவும் பலியிடப்படுகின்றன.
நேர்த்திக்கடன்
அவரவர் வசதிக்கேற்ப வளரி செய்து வைக்கின்றனர்.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
கொட்டு, மேளம், உறுமி அடித்து, நாயனம் ஊதி வணங்குகின்றனர்.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
கோயில் பூசாரி திருவிழாவின் நாள் மற்றும் நேரம் கூறுகிறார். பொங்கலிட்டு, தேங்காய் பழம் வைத்து வணங்கியபின் அவரவர் கொண்டு வந்திருக்கும் வளரிகளை வைத்து பூசை செய்யப்படுகிறது.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்