Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புரட்டாசி - அய்யனார் சிலை எடுப்புத் திருவிழா

Purattasi - Ayyanar Silai Eduppu Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

மக்கள் வேண்டிக் கொண்டது நிறைவேறும் என்பது நம்பிக்கை.


நடைபெறும் இடம்

கருப்பசாமி கோயில் மந்தை மற்றும் வாகைக் குளம் அய்யனார் கோயில்.


நடைபெறும் தருணங்கள்

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத கடைசி செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறுகிறது.


ஊர்

பெரிய வாகைக்குளம்

மாவட்டம்

மதுரை

பாலினம்
ஆண்
விழாவின் வரலாறு / கதை
புரட்டாசி சிலை எடுப்புத் திருவிழாவின் போது பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களின் துண்பங்களைப் போக்குவதற்கும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கும் சுடுமண் பொம்மை செய்து அய்யனாரின் முன் வைக்கின்றனர். அப்படி வைத்தால் தங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்புகின்றனர். கை, கால் முறிவிலிருந்து நலம் பெற கை மற்றும் கால்கள் போன்ற உருவம் உடைய சுடுமண் பொம்மைகளை செய்த வைக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் குழந்தை உருவங்களை செய்து வைக்கின்றனர். கால்நடைகளின் நலனுக்காக மாடு உருவத்தை சுடுமண் சிற்பமாக செய்து வைக்கின்றன. பசுமாடு, அடைக்கோழி, சல்லிக்கட்டுக் காளை போன்ற உயிரினங்களுக்கு நோவு கண்டால் அதே போன்ற உருவம் செய்து சுமந்து செல்வது திருவிழாவின் தனித்துவம் ஆகும். காவல் துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர் காவலர் உருவத்தை குயவரிடம் சொல்லி செய்து வைக்கின்றார். இதைத் தவிர தெய்வ உருவ சிலைகளும் செய்து வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பக்தரின் தேவைக்கு ஏற்ப, வாகைக்குளத்தின் குறிப்பிட்ட மூன்று குடும்பத்தினர், சுட்டு மண் பொம்மைகளை செய்கின்றனர். வாகைகுளத்தின் மண்ணையும் நெல் உமியையும் நீரால் பிசைந்து, சுட்டு, பொம்மைகள் செய்யப்படுகின்றன. இவர்கள்தான் திருவிழாவின் போது பூசை கட்டுகின்றனர். இருநூறுக்கும் மேற்பட்ட பொம்மைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கருப்சாமி கோயிலின் முன்பு வைத்து வணங்கப்பட்டு, குளத்தின் அருகே உள்ள அய்யனார் கோயில் முன்பு வைக்கப்படுகின்றன.
விழாவின் தொன்மை
இத்திருவிழா நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெறுவதாக இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
விரத முறைகள்
திருவிழா நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே, அதாவது ஆடி மாதத்திலேயே குயவர்களிடம் சிலைகளை செய்யச் சொல்லி விடுகின்றனர். ஊர் கூடி கொடி ஏற்றி திருவிழாவை தொடங்குகின்றனர்.
பலியிடல்
செவ்வாய் கிழமையன்று பொங்கள், முளைப்பாரி மற்றும் மாவிளக்கு செய்துவிட்டு புதன் கிழமையன்று காலை கருப்பசாமிக்கு கருங்கிடாய் வெட்டுகின்றனர். சிலைகள் சுமந்து செல்லும்போது அவசியம் அசைவம் அருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பதால் பெரும்பாலான வீடுகளில் சேவல் அல்லது கிடாய் வெட்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்
சிலைகள் செய்து சுமந்து செல்வதே நேர்த்திக் கடனாகும்.
குறி சொல்லும் முறை
குறி சொல்லும் முறை உண்டு. அந்த ஆண்டு மழை வளம் மற்றும் ஊர் மக்கள் நலன் எப்படி அமையும் என்று குறி சொல்கின்றனர்.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
கொட்டு மேளம், உருமி மற்றும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் உண்டு.
சிறப்பம்சங்கள்
இவ்வூர் திருவிழாவில் பங்கேற்க ஊர் மக்களின் உறவினர்கள் பல திசைகளிலிருந்தும் வருகின்றனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

ஆய்வாளர் அருண்குமார்

காணொலி

ஆய்வாளர் அருண்குமார்