Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பாஸ்கு திருவிழா

Pasca Festival

வகை

பிற


திருவிழாவின் பயன்

1) பாரம்பரிய நிகழ்த்துக்கலை அறிதல்

2) பழைமை தொடர்தல்


நடைபெறும் இடம்

மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலய வளாகத்தில் உள்ள பாஸ்கா மேடையில் நடைபெறும்.


நடைபெறும் தருணங்கள்

புனித வெள்ளி கொண்டாடப்படும் தினத்தை கணக்கிட்டு திருவிழா நாளை முடிவு செய்கின்றனர்.


ஊர்

மேட்டுப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

பாலினம்
பொது
விழாவின் வரலாறு / கதை
மேட்டுபட்டியில் அமைந்துள்ள மிகப் பழைமையான புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து கொண்டு வந்த மீட்பின் வரலாற்றை பாஸ்கு / பாஸ்கா திருவிழாவாக கொண்டாடுகின்றனர். சுமார் 330 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை ஒட்டி இரண்டு நாட்கள் இயேசு உயிர் நீத்து, மீண்டும் உயிர் எழுந்த நிகழ்வை, நாடக வடிவில், இரவு நேரத்தில் நிகழ்த்துகின்றனர்.

விழாவின் தொன்மை
கமார் 330 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
நேர்த்திக்கடன்
ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் உருவச்சிலையின் மேல் உப்பு மற்றும் மிளகு கலந்த கலவை எறியப் படுகிறது.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
இயேசு உயிர் நீத்து, மீண்டும் உயிர் எழுந்த நிகழ்வை இரண்டு நாட்கள் இரவு நேரத்தில் நாடகமாக நிகழ்த்துகின்றனர்.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
1) பேய் பாஸ்கா - நரகத்தில் நடைபெறும் காட்சிகள் :

பாஸ்கு திருவிழாவின் ஒரு பகுதியாக, புனித வெள்ளி அன்று உயிர் துறந்த இயேசு கிறிஸ்துவின் உடலை (சிலையை) பூப்படுக்கையில் கிடத்தி இரவு ஒப்பாரி பாடல் பாடி, அதிகாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு போன்ற அமைப்பில் வைத்து, இறுதி ஊர்வலம் போன்றே நடத்திச் செல்கிறார்கள். இது தூம்பா ஊர்வலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இது போன்ற ஒரு சடங்கைப் பார்க்க இயலாது என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2) சாமி பாஸ்கா - உயிர்த்து எழும் காட்சிகள் :

ஈஸ்டர் அன்று மீண்டும் உயிர் பெறும் 'உயிர்த்த ஆண்டவர்' இயேசு கிறிஸ்துவின் சிலை ஊர்வலமாக திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் சப்பரத்தில் எடுத்து செல்லப்படுகிறது. இந்த சப்பரங்களை மனிதர்கள் கைகளால் தள்ளி நகர்த்துகின்றனர். நோய்களிலிருந்து விடுபட, இந்த உயிர்த்த ஆண்டவருக்கு, மத வேறுபாடு இன்றி அனைவரும் உப்பும் மிளகும் வாங்கி செலுத்துகிறார்கள்.

3) திருவிழாவின் இறுதியாக ஊர்வலம் நடைபெறும்.
சிறப்பம்சங்கள்
தூம்பா ஊர்வலம் (இறுதி ஊர்வலம்) மற்றும் உயிர்த்த ஆண்டவர் ஊர்வலம் ஆகியவை இவ்விழாவின் சிறப்பம்சங்களாகும்.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்