Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புனித குழந்தை தெரசாள், புனித சந்தியகப்பர் திருவிழா

St. Little Theresa, St. Santhiyagappar Festival

வகை

பிற


திருவிழாவின் பயன்

இந்த நன்றி தெரிவித்தல் திருவிழாவின் போது கூட்டு வழிபாடு நடைபெறும்.


நடைபெறும் இடம்

புனித குழந்தை தெரசாள் மற்றும் புனித சந்தியகப்பர் ஆலய வளாகத்தில் நடைபெறும்.


நடைபெறும் தருணங்கள்

ஆடி மாதம்


ஊர்

எ. வெள்ளோடு

மாவட்டம்

திண்டுக்கல்

பாலினம்
பொது
விழாவின் தொன்மை
ஊரின் பாதுகாவலர்களாகவும், செழிப்பிற்கு காரணமாகவும் விளங்கும் புனிதர்களின் ஆசி மற்றும் கருணைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் இத்திருவிழா நடைபெற்று வருவதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலியிடல்
ஆடு, சேவல் மற்றும் கோழி பலியிடப்படுகின்றன.
நேர்த்திக்கடன்
அரிசி மூட்டைகள் மற்றும் பிற விவசாய விளைச்சல் பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஆடு, சேவல், கோழி, போன்றவை நேர்த்திக் கடன்களாக செலுத்தப்படுகின்றன.
பொறுப்பாளர்
ஊர்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
வான வேடிக்கை, இசைக் கச்சேரிகள் போன்றவை நடைபெறுகின்றன.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
புனிதர்களின் உருவம் பொறித்தக் கொடியை ஏற்றி திருவிழா தொடங்கப்படுகிறது. சிறப்புத் திருப்பலிகள், கூட்டுப் பிரார்த்தனைகள், சப்பர ஊர்வலங்கள், வான வேடிக்கைகள் என பகல் மற்றும் இரவு நேரங்களில் திருவிழா நடைபெறுகிறது.
சிறப்பம்சங்கள்
இரவுத் திருவிழாவின் போது புனிதர்களின் சொருவம், அதாவது உருவம், தங்கிய சப்பரங்களின் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்