Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

செபஸ்தியார் திருத்தல ஆண்டு திருவிழா

Annual Festival of St. Sebastian Shrine

வகை

பிற


திருவிழாவின் பயன்

இது நன்றி வழிபாட்டு திருவிழாவாகும்.


நடைபெறும் தருணங்கள்

ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.


பாலினம்

ஆண்


ஊர்

முத்தழகுபட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

விழாவின் வரலாறு / கதை
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் ஆடி மாத தொடக்கத்தில் காலரா, அம்மை போன்ற கொடிய நோய்கள் பரவியதால் அவற்றின் தாக்கம் குறைய அப்பகுதி மக்கள் கிறித்தவ மத புனிதரான செபஸ்தியார் அவர்களின் திருவுருவச் சிலையை செய்து குருசடி அமைத்து, பலி கொடுத்து வழிபாடுகள் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
பலியிடல்
கோழி மற்றும் ஆடு பலியிடப்படுகின்றன.
நேர்த்திக்கடன்
நேர்த்தி வைத்து, பிறந்த குழந்தைகளை ஏலம் விடும் நிகழ்வு நடைபெறும். ஏலத்தில் இருந்து பெறப்படும் தொகை கோயிலுக்கு சொந்தமாகும்.
பொறுப்பாளர்
ஊர்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
கொடியேற்றம், திருத்தேர் பவனி, திருவிழா திருப்பலி, ஆடு வெட்டும் நிகழ்வு ஆகியவை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாகும்.
சிறப்பம்சங்கள்
புனிதரின் திருவுருவ வீதி உலா இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்