Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சுமை தாங்கிக் கல் படையல்

Worship of a Burden Stone

வகை

பிற


திருவிழாவின் பயன்

முன்னோர் வழிபாடு, பாரம்பரியம் தொடர்தல்


நடைபெறும் தருணங்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 6 ஆம் தேதி நடைபெறும்.


பாலினம்

பெண்


ஊர்

கீழத்திப்பம் பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

விழாவின் வரலாறு / கதை
வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்க முடியாமல் இறந்து போன கர்ப்பிணிகள், குடும்ப பாரத்தை சுமந்து இறந்து போன குடும்ப உறவுகள் ஆகியோரின் நினைவாக சாலையோரங்களில் சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்படுகின்றன. இரண்டு செங்குத்தான கற்களின் மேல் கிடைமட்டமாக ஒரு பலகை கல் வைத்திருக்கும் அமைப்பே சுமைதாங்கி கற்களாகும். அடையாளம் தெரியாத மக்கள் தங்கள் தலைச் சுமையை இறக்கி வைத்து இளைப்பாற வழிவகை செய்வதால், இறந்து பட்ட அவர்கள் மகிழ்வார்கள் என்பது நம்பிக்கை. அப்படி அமைக்கப்பட்ட ஒரு சுமை தாங்கிக் கல் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் - கீழத் திப்பம்பட்டி கிராமத்தில் உள்ளது. இது இக்கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் திரு. தங்கவேல் அவர்களின் தாயார் திருமதி.வீரம்மாள் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டது.

ஒன்பது மாத கர்ப்பிணியான திருமதி.வீரம்மாள், பொது ஆண்டு 1981 - ஆம் ஆண்டு ஐப்பசி 6 ஆம் நாள் (அக்டோபர் 22, 1981) வியாழக் கிழமை அன்று இயற்கை எய்தினார். அவர் நினைவாக சாலையோரத்தில் ஒரு சுமைதாங்கிக் கல்லை குடும்பத்தினர் அமைத்துள்ளனர். திரு. தங்கவேல் மற்றும் அவர் குடும்பத்தினர் ஒவ்வொரு ஐப்பசி மாதம் 6 ஆம் நாளன்றும் புத்தாடை, காதோலை, கருகமணி, வாழைப்பழம், தேங்காய் இவற்றோடு படையலிட்டு வழிபாடுகள் நடத்தி தன் தாயை நினைவு கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
விழாவின் தொன்மை
பொது ஆண்டு 1981 முதல் இவ்வழிபாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பலியிடல்
இல்லை
பொறுப்பாளர்
தனிநபர் / குடும்பம்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
சுமைதாங்கி கல்லின் முன்பு படையலிட்டு வழிபாடுகள் நடைபெறும்.
சிறப்பம்சங்கள்
புத்தாடைகள், காதோலை, கருகமணி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து படையலிடப்படுகிறது.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்