Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வைகாசி விசாகத் தெப்பத் திருவிழா

Float Festival of Vaikasi Visakam

வகை

ஆகமக் கோயில்கள்


திருவிழாவின் பயன்

1) கோயில் தொன்மை மற்றும் நகரின் முக்கியத் திருவிழாக்கள் குறித்து அறிதல்,

2) பாரம்பரியம் காத்தல்.


நடைபெறும் இடம்

திண்டுக்கல் மலைக்கோட்டையில் கோட்டைக் குளத்தில் நடைபெறும்.


நடைபெறும் தருணங்கள்

வைகாசி திங்களில் வரும் விசாக நட்சத்திரம் மற்றும் முழு நிலவு நாளில் மாலைப் பொழுதில் நடைபெறுகிறது.


ஊர்

பள்ளபட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

பாலினம்
பொது
விழாவின் வரலாறு / கதை
திண்டுக்கல் நகரின் அடையாளமான மலைக்கோட்டையின் பெயர் பத்மகிரி. முன்பு மலை மீது அருள்பாளித்த இறைவன் பத்மகிரீஸ்வரர், இறைவி அபிராமி அம்பிகை இன்று நகர் பகுதியில் எழுந்தருளி அருள் புரிகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. அதன்படி வைகாசி திங்களில் வரும் விசாக நட்சத்திரத்தில் மலைக்கோட்டையின் கோட்டைக்குளத்தில் தெப்ப திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

பொது ஆண்டு 1970- ஆம் ஆண்டு நடைபெற்ற இத்திருவிழா பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மே 23, 2024- வைகாசி திங்களின் விசாக நட்சத்திரத்தன்று முழு நிலவு நாளில் இத்திருவிழா நடைபெற்றது.
பலியிடல்
இல்லை
பொறுப்பாளர்
பிற
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
நாதசுவரம், மத்தளம் மற்றும் கோயில் மணி இசைக்கபட்டது.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
வைகாசி திங்களின் விசாக நட்சத்திரத்தன்று முழு நிலவு நாளின் மாலைப் பொழுதில் மலைக்கோட்டையின் கோட்டைக்குளத்தில் அமைக்கப்பட்ட கோயில் வடிவ மிதவையில் அருள்மிகு பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் இணைந்து மிதவையின் பக்கக் கயிற்றை மாறி மாறி வடம் பிடித்து இழுக்கக் கோட்டைக்குளத்தில் மிதவை அசைந்தாடியபடி தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி வழிபட்டு சென்றனர்.
சிறப்பம்சங்கள்
அருள்மிகு பத்மகிரீஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் உற்சவர்கள் கோயில் வளாகத்தில் இருந்து சப்பரத்தில் எழுந்தருளி, இசைக் கருவிகள் இசைக்க, திருமுறைகள் பாட ஊர்வலமாக மலைக்கோட்டையின் கோட்டைக்குளத்தை வந்தடைவர்.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

ம. சதீஸ்குமார்

காணொலி

ம. சதீஸ்குமார்