On a solitary rock in Kottakudi village agriculture fields
Language & Script
Tamil
Period / King
Nayaka Period
Village Name
Kottakudi
District
Theni
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இத்தனிப் பாறையில் பத்து வரிகள் கொண்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இன்றைய கொட்டைக்குடியில் வெண்ணன் நல்லூர் அரசனுக்குச் சொந்தமான, வலிமையான கோட்டை ஒன்று இருந்திருக்கிறது. அக்கோட்டை எல்லைக்கு உட்பட்ட வயல்வெளியில் காணப்படும் தனிப் பாறை ஒன்றில் வெட்டப்பட்ட இந்தக் கல்வெட்டில், கோவிலில் இசை இசைப்பவனான பாண நங்கன் சம்மந்தன் என்பவனுக்கு ஒரு நில அளவை முறையின் அடிப்படையில் நிலம் அளந்து தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது. இக்கல்வெட்டு பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்களைக் கொண்டு, தமிழ் மொழியில் வெட்டப்பட்டுள்ளது. இத்தனிப் பாறையின் மேல் பகுதியில் செக்கு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
A historic year
16th Century CE
Additional Information
On this solitary rock, an inscription of ten lines is found. In present-day Kottaikudi, there was a strong fort belonging to the king of Vennan Nallur. This inscription, carved on a solitary rock found in the open fields within the fort's boundary, records the donation of a land to a person named Pāna Nangan Sammanthan. He was a musician in a temple. The land has been measured based on a specific land measurement system. This inscription has been carved in the 16th century Tamil script. An oil press can be seen on the upper part of this solitary rock.