At the lotus pond located to the west of Periyakulam town
Language & Script
Tamil
Village Name
Periyakulam
District
Theni
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
தாமரைக் குளம் என அழைக்கப்படும் பெரிய குளம் என்ற நீர்நிலையில் உள்ள முதல் மடையான கங்காமடையில் இரண்டு மடைத்தூண்கள் உள்ளன. அவற்றுள் ஒரு மடைத்தூணில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்கிறது. பெரிய குளத்தைச் சேர்ந்த நரசய்யன் என்பவரின் மகன் அம்புலிங்கய்யன் என்பவர் இம்மடையை அமைத்துள்ளார், என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. ’ஸ்வஸ்தி ஸ்ரீ ' எனத் தொடங்கும் இக்கல்வெட்டு பொது ஆண்டு 1713ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது எனக் கல்வெட்டில் செய்தியுள்ளது.
இக்குளத்தில் உள்ள இரண்டு கல்தூண்களை, 'ஆண் கல் - பெண் கல்’ என்ற பெயரிலும், ’ராஜா-ராணி கல்’ என்ற பெயரிலும் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இக்குளத்தின் பரப்பளவு சுமார் 360 ஏக்கர் மற்றும் நீர்மட்டம் 16 அடி ஆகும்.
A historic year
18th century CE
Additional Information
Thamarai Kulam (Lotus Pond),is also refered to as Periyakulam. Here, two stone pillars are noticed near the first irrigation sluice which is called as the Gangāmadai. This inscription is carved on one of these two stone pillars and it mentions that Ambulingaiyan, the son of Narasaiyyan from Periyakulam, built this sluice. The inscription begins with "Swasti Sri" (an auspicious word) and states that it was carved in the year 1713 CE.
The two stone pillars in this tank are commonly referred to as "Male Stone – Female Stone" or "Raja-Rani Stone" by the locals. The area of this tank is approximately 360 acres, and the water depth is 16 feet.