Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பாடல் கல்வெட்டு

Poem Inscription

அமைவிடம்

போடிநாயக்கனூர் வடமலை நாச்சியம்மன் கோயில் அருகில்


மொழியும் எழுத்தும்

தமிழ், வட்டெழுத்து.


காலம் / அரசன்

முற்காலப் பாண்டியர் காலம்


ஊர்

போடிநாயக்கனூர்

மாவட்டம்

தேனி

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்தக் கல்வெட்டு தமிழ் மொழியிலும் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளது. 11 வரிகள் கொண்ட இக்கல்வெட்டில் முதல் மூன்று வரிகள் பாடல் வடிவில் வெட்டப்பட்டிருக்கின்றன. 'மரங்கள் அடர்ந்த சோலையிலுள்ள, ஆநிரைக்குள் புலி ஒன்று புகுந்து பசுக்களைக் கொல்கிறது. இதைக்கண்ட தென்னவன் என்பவன், புலியுடன் சண்டையிட்டு ஆநிரைகளைப் பாதுகாத்து வீரமரணமடைகின்றான். அவனுடைய வீரத்தையும் புகழையும் சொல்வது அவ்வளவு எளிதல்ல', என்ற செய்தியே வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சேதமடைந்த நிலையில் இருப்பதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இது பொது ஆண்டு 9 - 10ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட முற்காலப் பாண்டியர்காலக் கல்வெட்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

குறிப்புகள்
https://www.tnarch.gov.in/swastik-wall (for the word poem inscription)
புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்

காணொலி

ப.பிரதீப்